February 9, 2026

தில்லியில் 10க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

தில்லியில் 10க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தில்லியில் 10க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

தில்லியில் 10க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தில்லியில் 10க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மின்னஞ்சல்கள் வந்தன. இதைத்தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளில் இருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

பலர் பள்ளி வாயில்கள் அருகே கூடிவந்ததைக் காண முடிந்தது. தீயணைப்பு வீரர்கள் மற்றும் வெடிகுண்டு அகற்றும் குழுக்கள் சம்பவ இடங்களுக்கு விரைந்தன என்று தில்லி தீயணைப்பு சேவைகள் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், இன்று மொத்தம் 10 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. தீயணைப்பு குழுக்கள் உடனடியாக வளாகத்தை அடைந்தன. சோதனை நடந்து வருகிறது என்று தெரிவித்தார்.

தற்போது கட்டடங்களில் தேடுதல் பணிகள் நடந்து வருகின்றன. இதனால் பெற்றோர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Spread the love