இந்நிகழ்வில், பள்ளியின் தாளாளர் ஹென்றி அருளானந்தம் மற்றும் .தமயந்தி ஹென்றி அருளானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குழந்தைகளுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து, மஞ்சள் கலந்த பச்சரிசியில் வித்யாரம்பம் செய்து வைக்கப்பட்டது. இதன் மூலம் குழந்தைகள் தங்களின் கல்விப் பயணத்தை இனிதே தொடங்கினர்.
இந்நிகழ்வில் பள்ளியின் செயலாளர் மேத்யூ ஜோயல் மற்றும் முதல்வர் உமாமகேஸ்வரி ஆகியோர் உடனிருந்தனர். விழாவில் பங்கேற்ற குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. மேலும், குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையில் சிறப்புப் பரிசுகளும் வழங்கப்பட்டன..நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைப் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் இணைந்து மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர்.கல்வியின் தொடக்கத்தை பாரம்பரியத்துடனும் கொண்டாடும் வகையில் இந்நிகழ்ச்சி அமைந்திருந்தது.

More Stories
திருப்பூர் நஞ்சராயன் நகரில் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர் –பொதுமக்கள் வேதனை!
திருப்பூரில் நவராத்திரி விழாவில் பங்கேற்ற தென்னிந்திய ஃபார்வர்டு பிளாக் தலைவர் திருமாறன் ஜி – த. வெ. க. அரசுக்கு கடும் கண்டனம்,,,,
கீழக்கரை நகராட்சியில் நான்கு வகைக் குப்பைகளைத் தரம் பிரித்து வழங்க வேண்டும் – நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணவேணி வேண்டுகோள்!