April 2, 2026

‘துணிச்சல் இருந்தால் ஹார்முஸ் ஜலசந்தியில் பெட்ரோல் எடுக்கலாம்’ – ஐரோப்பிய நாடுகளுக்கு ட்ரம்ப் ஆலோசனை

வாஷிங்டன்: அமெரிக்கா​வுட​னான போர் காரண​மாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் ராணுவம் மூடி உள்​ளது. இதனால் கச்சா எண்​ணெய் போக்​கு​வரத்து முடங்​கி, விமான பெட்​ரோலுக்கு கடும் தட்​டுப்​பாடு ஏற்பட்டிருக்கிறது. இதனால் பிரிட்​டன் உள்​ளிட்ட ஐரோப்பிய நாடு​களில் விமான போக்​கு​வரத்து மிகக் கடுமை​யாகப் பாதிக்​கப்​பட்டு உள்​ளது.

இதுதொடர்​பாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சமூக வலை​தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதிவு​களில் கூறியிருப்​ப​தாவது: ஈரானுக்கு எதி​ரான போரில் பிரிட்​டன் உள்​ளிட்ட நாடு​கள் அமெரிக்கா​வுடன் இணைந்து போரிடவில்​லை. தற்​போது அந்த நாடு​களில் விமான பெட்ரோலுக்கு தட்​டுப்​பாடு ஏற்​பட்​டிருக்​கிறது. அவர்களுக்கு 2 ஆலோ​சனை​களை கூற விரும்​பு​கிறேன்.

அமெரிக்​கா​விடம் போது​மான விமான பெட்​ரோல் இருக்கிறது. எங்​களிடம் இருந்து நல்ல விலை கொடுத்து விமான பெட்​ரோலை வாங்​கிக் கொள்​ளலாம். ஒரு​வேளை அமெரிக்​கா​விடம் வாங்க விருப்​பம் இல்லை என்​றால் 2-வது ஆலோ​சனையை கூறுகிறேன்.

உங்​களுக்கு துணிச்​சல் இருந்​தால் நேரடி​யாக ஹார்​முஸ் ஜலசந்தி பகு​திக்கு சென்று உங்​களுக்கு தேவை​யான விமான பெட்​ரோலை எடுத்​துக் கொள்​ளலாம். இனிமேல் உங்​களை தற்​காத்து கொள்ள நீங்​களே போரிட கற்​றுக் கொள்​ளுங்​கள். நீங்​கள் அமெரிக்கா​வுக்கு உதவி செய்யவில்​லை. நாங்​களும் உங்​களுக்கு உதவி செய்ய மாட்டோம். இவ்​வாறு ட்ரம்ப்​ தெரி​வித்​துள்​ளார்​.

Spread the love