நடிகர் ரன்வீர் சிங் நடித்துள்ள துரந்தர் 2 படத்தின் டிரைலர் குறித்து…

துரந்தர் 2 படத்தின் போஸ்டர்.– படம்: எக்ஸ் / ஜியோ ஹாட்ஸ்டார்.
நடிகர் ரன்வீர் சிங் நடித்துள்ள துரந்தர் 2 (துரந்தர் தி ரிவென்ச்) படத்தின் டிரைலர் நாளை (மார்ச் 7) காலை 11.01 மணிக்கு வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது.
ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படம் வரும் மார்ச் 19ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
ஜியோ ஸ்டூடியோஸ் தயாரிப்பில் ஆதித்யா தார் இயக்கத்தில் உருவான துரந்தர் திரைப்படம் உலகமெங்கும் சுமார் ரூ.1,300 கோடிக்கும் அதிகமாக வசூலித்து அசத்தியது.
பாகிஸ்தானுக்கு உளவாளியாகச் செல்லும் ரன்வீர் சிங் கதாபாத்திரம், அதில் வில்லனாக நடித்த அக்ஷய் கண்ணாவுக்கும் சமூக வலைதளத்தில் மிகுந்த வரவேற்பு கிடைத்தது.
இந்தியா – பாகிஸ்தான் அரசியல் ரீதியாக விமர்சனங்களை எதிர்கொண்ட இந்தப் படம் வலதுசாரி மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.Advertise with us
சாரா அர்ஜுன், மாதவன், சஞ்சய் தத், ரவி ராம்பால் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். துரந்தர் படத்தின் முதல் பாகம் 3 மணி நேரம் 34 நிமிஷம் கொண்டதாக உருவாகியிருந்தது.
இந்நிலையில், இதன் இரண்டாம் பாகம் 4 மணி நேரம் இருக்குமென தகவல்கள் தெரிவிக்கின்றன. இயக்குநரின் தைரியமான முயற்சிக்கு பாராட்டுகள் வந்தாலும் அதிகமாக முயற்சிக்கிறாரோ என்ற விமர்சனங்களும் எழுகின்றன.

More Stories
ஜிவி பிரகாஷின் ஹேப்பி ராஜ் வெளியீட்டுத் தேதி!
‘கெணத்த காணோம்’ பட அறிமுக விழா – மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா குறித்து யோகி பாபு நெகிழ்ச்சி
KHxRK படத்தில் மம்மூட்டி?: ரஜினியின் தளபதியை பரிந்துரை செய்ததே கமல் தானாம்