February 17, 2026

தொடக்கப் பள்ளி மாணவர்கள் அடைவுத் திறன் ஆய்வு: பிப்​.18, 20-ம் தேதிகளில் நடைபெறுகிறது

தொடக்கப் பள்ளி மாணவர்கள் அடைவுத் திறன் ஆய்வு: பிப்​.18, 20-ம் தேதிகளில் நடைபெறுகிறது

சென்னை: தமிழகத்​தில் தொடக்​கப் பள்ளிகளில் பயிலும் மாணவர்​களின் அடிப்​படைக் கற்​றல் திறனை சோதனை​யிடும் 100 நாள் சவால் நிகழ்வு வரும் 18, 20-ம் தேதி​களில் நடை​பெறுகிறது.

இது தொடர்​பாக தொடக்​கக் கல்வி இயக்​குநர் பூ.ஆ.நரேஷ், அனைத்து மாவட்​டக் கல்வி அலு​வலர்​களுக்​கும் அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்கை விவரம்: 2024-25-ம் கல்​வி​யாண்​டில் அரசு, அரசு உதவி​பெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்​களின் தமிழ், ஆங்​கிலம் வாசிப்​பு, கணிதத் திறன், கற்​றல் அடைவு​கள் குறித்து 100 சவாலை பள்ளிக் கல்​வித் துறை அறி​வித்​தது.

அதன்​படி, நடப்பு கல்​வி​யாண்​டில் 14 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட பள்ளிகள் 100 நாட்​கள் சவாலுக்கு தயார் நிலை​யில் உள்​ள​தாக முன்​மொழியப்​பட்​டுள்​ளது. இம்மாதம் 3-வது வாரத்​தில் 100 நாள்​கள் சவால் மதிப்​பீட்டு ஆய்வு நடத்​தப்பட உள்​ளது.

அதன்​படி, 1 முதல் 3-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்​களுக்கு வரும் 18-ம் தேதி​யும், 4, 5-ம் வகுப்பு மாணவர்​களுக்கு 20-ம் தேதி​யும் தமிழ், ஆங்​கிலம், கணிதம் ஆகிய பாடங்​களில் அடிப்​படைத் திறன்​களை மதிப்​பீடு செய்ய வேண்​டும்.

ஒரு வகுப்​புக்கு குறைந்​த​பட்​சம் 5 மாணவர்​களிடம் இந்த கற்​றல் அடைவுத் திறன் சோதிக்​கப்பட வேண்​டும். இந்த தகவலை அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்​களுக்​கும் தெரிவிக்க வேண்​டும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது. அலு​வலர்​கள், மக்​கள் பிர​தி​நி​தி​கள், பள்ளி மேலாண்​மைக் குழு பிர​தி​நி​தி​கள் முன்​னிலை​யில் இந்த சோதனை நடத்​தப்​பட உள்​ளது குறிப்பிடத்தக்கது.

Spread the love