March 23, 2026

நாமக்கல்:ஆணழகன் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு தமிழக அரசு வேலை வழங்க வேண்டும்…தமிழக முதல்வர் துணை முதல்வரை சந்தித்து மனு அளித்தும் பலனில்லை…வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தால் இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்ல மாட்டார்கள்…

தமிழ்நாடு அமெச்சூர் பாடி பில்டிங் அசோசியேசன் தலைவர் அரசு நாமக்கல்லில் பேட்டி…

நாமக்கல் மாவட்ட அமெச்சூர் பாடி பில்டிங் சங்கமும் தனியார் பிட்னஸ் சென்டர் ஆகியவை இணைந்து நாமக்கல்லில் மாநில அளவிலான ஆண்கள் பெண்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான பாடி பில்டிங் போட்டிகள் இன்று நடைபெற்றது.

 இதில் நாமக்கல், சென்னை, திருவள்ளூர், சேலம், கிருஷ்ணகிரி, திருச்சி, கரூர், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 142 பேர் கலந்து கொண்டு 15 பிரிவின் கீழ் போட்டியில் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர்.

இந்த பாடி பில்டிங் போட்டியில் வெற்றிப்பெற்றவர்களுக்கு தமிழ்நாடு அமெச்சூர் பாடி பில்டிங் அசோசியேசன் தலைவர் அரசு, உலக ஆணழகன் பாஸ்கரன், தனலெட்சுமி ஆகியோர் ரொக்கப்பரிசு, சான்றிதழ், பதக்கம், வெற்றிக்கோப்பைகளை வழங்கி வாழ்த்தினர்.

இதனையடுத்து தமிழ்நாடு அமெச்சூர் பாடி பில்டிங் அசோசியேசன் தலைவர் அரசு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.,

மாநில, தேசிய, சர்வதேச அளவிலான ஆணழகன் போட்டியில் வெற்றிப்பெறும் வீரர்களுக்கு தமிழக அரசு விளையாட்டுத்துறைக்கான 3 சதவிகித இடஒதுக்கீட்டில் ஆணழகன் போட்டியில் வெற்றிப்பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிட வேண்டும் என தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளோம் ஆனால் எந்த அறிவிப்பு இல்லை.

இந்தியாவில் மகாராட்டிரா மாநிலத்தில் ஆணழகன் போட்டியில் வெற்றிப்ப்பெற்றவர்களுக்கு 5 சதவிகித இடஒதுக்கீட்டில்  வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகின்றன அதேப்போல மத்திய அரசும் வேலைவாய்ப்பு வழங்குகின்றன எனவே தமிழக அரசும் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.

அதே நேரத்தில் ஆணழகன் போட்டியில் வெற்றிபெறுவோருக்கு வேலைவாய்ப்பு வழங்கும்பட்சத்தில் அவர்கள் தவறான பாதைக்கு இளைஞர்கள் செல்ல வாய்ப்பில்லை, தற்போது பெண்களும் ஆர்வமுடன் பலர் பாடி பில்டிங் போட்டியில் கலந்து கொள்கின்றனர் அவர்களுக்கும் தமிழக அரசு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தால் நன்றாக இருக்கும்  என்றார்.

Spread the love