October 18, 2026

நாமக்கல்​லில் 4நாட்கள் நடைபெறும், மாநில அளவிலான குத்துசண்டை போட்டியில், 38 மாவட்டங்களை சேர்ந்த 3,000 மாணவ மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.

நாமக்கல் அருகே வேட்டாம்பாடியில் உள்ள, தனியார் மெட்ரிக் பள்ளியில், பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாநில அளவிலான பாரதியார் தின, குடியரசு தின குத்துச்சண்டை போட்டிகள் இன்று துவங்கியது. நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன் முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சியர் மதுபாலன் தலைமை வகித்து, போட்டியை துவக்கி வைத்தார்.

நாமக்கல், சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர், திருச்சி, கோவை, சென்னை, கன்னியாகுமாரி உள்பட 38 மாவட்டங்களை சேர்ந்த, 3,000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் குத்துச்சட்டை போட்டியில் கலந்துகொள்கின்றனர்.

போட்டிகள் அனைத்தும் நாக்அவுட் முறையில் நடக்கிறது. மேலும், 14, 17, 19 வயதிற்கு உட்பட்டோருக்கு, எடை பிரிவுகளில், போட்டிகள் நடத்தப்படுகிறது. மாநில அளவில் முதல் பரிசு தங்கப்பதக்கம், இரண்டாம் பரிசு, வெள்ளி பதக்கம், மூன்றாம் பரிசு வெண்கலப்பதக்கம் வழங்கப்படுகிறது. மேலும், போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. போட்டியில் முதலிடம் பெறும் மாணவ, மாணவியர், தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவார்கள்.

துவக்க விழாவில் முதன்மை கல்வி அலுவலர் மாதவன், மாநில முதன்மை உடற்கல்வி ஆய்வாளர்கள் கோபாலகிருஷ்ணன், ஜெயலட்சுமி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் காந்திமதி, டிஇஓக்கள் புருசோத்தமன், பச்சமுத்து, சாந்தி, ரெட்கிராஸ் செயலாளர் ராஜேஸ்கண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Spread the love