நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில், 1,000க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு, 7 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. அவற்றின் மூலம், தினசரி சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
உற்பத்தி செய்யப்படும் முட்டைகள், தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், விற்பனைக்காக தினமும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.
தினசரி பண்ணைகளில், முட்டை கொள்முதல் விலையை என்இசிசி அறிவித்து வருகிறது. அதை பண்ணையாளர்கள் கடைபிடித்து வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் 1ம் தேதி ஒரு முட்டையின் விலை ரூ.4.80 ஆக இருந்தது. பின்னர் படிப்படியாக சரிவடைந்து கடந்த ஏப். 1ம் தேதி ஒரு முட்டை விலை ரூ. 4.05 ஆனது.
இந்த நிலையில் இன்று மாலை என்இசிசி நாமக்கல் மண்டல தலைவர் சிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், முட்டை விலை 10 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 4.15 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
தற்போது கோடை காலம் துவங்கியுள்ளதால் பண்ணைகளில் சுமார் 15 சதவீதம் அளவிற்கு முட்டை உற்பத்தி குறைந்துள்ளது. இதனால் முட்டை விலை உயர்ந்துள்ளதாக பண்ணையளர்கள் தெரிவித்தனர்.
முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாக்களில்) : சென்னை 470, பர்வாலா 455, பெங்களூர் 455, டெல்லி 490, ஹொஸ்பேட் 395, ஹைதராபாத் 420, கொல்கத்தா 520, மும்பை 480, மைசூர் 460, விஜயவாடா 460.
கோழி விலை: பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ. 98 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. முட்டைக்கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ. 75 ஆக சிகா நிர்ணயித்துள்ளது.

More Stories
‘நாட்டில் வேறு பிரச்சினையே இல்லையா?’ – திருப்பரங்குன்றம் குறித்த வழக்கு ஒன்று ரூ.50,000 அபராதத்துடன் தள்ளுபடி
தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ‘ஸ்டாலின் முகாம்கள்’ நடத்தப்படும்
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஒன்றியத்தில் திமுக வேட்பாளர் பா.ராணி ஆதரித்து கழக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி தீவிர பிரச்சாரம் .