சென்னை: பத்திரப் பதிவுத்துறைத் தலைவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஆடி மாதம் தொடங்க இருப்பதால், ஜூலை 16-ம் தேதி வியாழக்கிழமை கூடுதலாக முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்க பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.
எனவே, அன்றைய தினம் ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 டோக்கன்கள் 2 சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 300 டோக்கன்கள், அதிகளவில் ஆவணபதிவு நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு டோக்கன்களுடன் ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு டோக்கன்களுடன் கூடுதலாக 4 டோக்கன்கள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

More Stories
‘அர்னாப்’ புயல் கரையைக் கடந்து வலுவிழந்தது: இந்திய வானிலை ஆய்வு மையம்
காடுகள் விரிவாக்க திட்டத்தில் கிருஷ்ணகிரி மலையில் 6 லட்சம் விதைகள் தூவி விழிப்புணர்வு
“ஆறுகளில் நுரை பொங்க சோப்பு, ஷாம்பு பயன்பாடு தான் காரணம்” – அமைச்சர் ராஜீவ் பேச்சால் சர்ச்சை