March 23, 2026

நீதிபதி தமிழ்வாணன் மறைவுக்கு முதல்வர், தலைவர்கள் இரங்கல்

சென்னை: ஓய்​வு​பெற்ற நீதிபதி தமிழ்​வாணன் மறைவுக்​கு, முதல்​வர் மற்​றும் அரசி​யல் தலை​வர்​கள் இரங்​கல் தெரி​வித்​துள்​ளனர்.

ஓய்​வு​பெற்ற சென்னை உயர்​நீ​தி​மன்ற நீதிபதியும், தமிழ்​நாடு மாநில ஆதிதிரா​விடர் மற்​றும் பழங்​குடி​யினர் ஆணைய தலை​வரு​மான தமிழ்​வாணன் (71) உடல்​நலக் ​குறை​வால் சிகிச்சை பெற்று வந்த நிலை​யில், சென்​னை​யில் நேற்று கால​மா​னார்.

சட்​டத் துறை​யில் பயின்று வழக்​கறிஞ​ராக தனது பணியை தொடங்​கிய​வர், 2005 முதல் 2016 வரை உயர்​நீ​தி​மன்ற நீதிபதியாக பதவி வகித்தார். பல முக்​கிய வழக்​கு​களில் சிறப்பான தீர்ப்​பு​களை வழங்​கி​யுள்​ளார்.

நீதித்​துறை​யில் இருந்து ஓய்​வு​பெற்ற பிறகு, கடந்த 2021-ம் ஆண்டு தமிழக அரசால், தமிழ்​நாடு மாநில ஆதி திரா​விடர் மற்​றும் பழங்​குடி​யினர் நல ஆணை​யத்​தின் தலை​வ​ராக நியமிக்​கப்​பட்​டார்.

இந்த பதவி​யில் இருந்​த​போது ஒடுக்​கப்​பட்ட சமூகத்தை சேர்ந்த மக்​களின் உரிமை​களை பாது​காப்​ப​தில் இழைக்​கப்​படும் அநீ​தி​களுக்கு எதி​ராக துரித​மாக செயல்​படு​வ​தில் அக்​கறை காட்டி வந்​தார்.

அவரது மறைவுக்கு முதல்​வர் மற்​றும் பல்​வேறு அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் இரங்​கல் தெரி​வித்​துள்​ளனர். அமைச்சர் ம.சுப்பிரமணியன், விசிக தலை​வர் திரு​மாவளவன் நேரில் சென்​று, தமிழ்​வாணன் உடலுக்கு அஞ்​சலி செலுத்​தி​னார்.

முதல்​வர் வெளி​யிட்ட இரங்​கல் செய்​தி​யில், “தமிழ்​நாடு மாநில ஆதி திரா​விடர் மற்​றும் பழங்​குடி​யினர் ஆணைய தலை​வரும், ஓய்​வு​பெற்ற உயர்​நீ​தி​மன்ற நீதிபதியுமான தமிழ்​வாணன் மறைந்த செய்​தி​யறிந்து மிக​வும் வருந்​தினேன்.

நீதி வழங்​கும் பணி​யிலும், ஒடுக்​கப்​பட்ட மக்​களின் உரிமை​களை காக்​கும் பணி​யிலும் திறம்பட செயல்​பட்ட தமிழ்​வாணனை இழந்து வாடும் குடும்​பத்​தினருக்​கும், நண்​பர்​களுக்​கும் எனது ஆழ்ந்த இரங்​கலை தெரி​வித்​துக் கொள்​கிறேன்” என தெரி​வித்​துள்​ளார்.

Spread the love