February 7, 2026

நெமிலி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஸ்ரீ மாதங்கி டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் சார்பில் ரூ.30 லட்சத்தில் 3 வகுப்பறை கட்டிடம் திறப்பு

ஸ்ரீமாதங்கி டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு திட்டத்தின்கீழ் ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பேரூராட்சி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கட்டப்பட்டுள்ள 3 வகுப்பறைகள் கொண்ட கட்டிடத்தை அந்நிறுவனத்தின் நிறுவனத் தலைவர் கடிகாசலம் திறந்துவைத்தார்.

ஸ்ரீமாதங்கி டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு திட்டத்தின்கீழ் ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பேரூராட்சி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கட்டப்பட்டுள்ள 3 வகுப்பறைகள் கொண்ட கட்டிடத்தை அந்நிறுவனத்தின் நிறுவனத் தலைவர் கடிகாசலம் திறந்துவைத்தார்.

சென்னை: ​ராணிப்​பேட்டை மாவட்​டம் நெமிலி பேரூ​ராட்சி அரசு மகளிர் மேல்​நிலைப் பள்​ளி​யில் ஸ்ரீ மாதங்கி டெக்​ஸ்​டைல்ஸ் நிறு​வனம் (நண்டு பிராண்​டு) சார்​பாக பெரு நிறுவன சமூகப் பொறுப்பு திட்​டத்​தின் கீழ் 3 வகுப்​பறை​கள் கட்​டிடம் கட்டி நேற்று திறக்​கப்​பட்​டது.

இது 1,728 சதுர அடி​யில் ரூ.30 லட்​சம் செல​வில் கட்​டப்​பட்​டுள்​ளது. விழாவுக்கு ஸ்ரீ மாதங்கி டெக்​ஸ்​டைல்ஸ் நிறு​வனர் தலை​வர் கடி​காசலம் சிறப்பு விருந்​தின​ராகப் பங்​கேற்​றார்.

இயக்​குநர்​கள் மஞ்​சுளா கடி​காசலம், சுரேஷ் கடி​காசலம் ஆகியோர் தலை​மை​யில் பள்ளி கட்​டிடங்​களை ஒப்​படைக்​கும் நிகழ்ச்சி நடை​பெற்​றது.

நிறு​வனர் தலை​வர் கடி​காசலம் கூறுகை​யில், “நாம் பிறந்த ஊருக்கு ஏதாவது செய்ய வேண்​டும் என்ற எண்​ணம் இருந்​த​தால், எங்​கள் நிறு​வனம் சார்​பில் நெமிலி மற்​றும் அதன் அரு​காமை​யில் உள்ள அரசுப் பள்​ளி​களில் வகுப்பறைகள், கழிப்​பறை​கள் மற்​றும் சுத்​த​மான குடிநீர் வழங்​கு​வதற்கு ஏற்​பாடு செய்து வரு​கிறோம். அந்த வகை​யில் இங்கு 3 வகுப்பறைகள் கட்​டப்​பட்​டுள்​ளன.

மேலும் கூடு​தலாக மகளிருக்​கான கழிப்​பறை​கள், சுத்​தி​கரிக்​கப்​பட்ட குடிநீர் வசதி ஏற்​படுத்த உள்​ளோம். மாணவி​கள் நன்​றாக படித்து சாதனை​கள் படைத்து பள்​ளிக்கு பெருமை சேர்க்க வேண்​டும்” என்​றார்.

நிகழ்ச்​சி​யில் நெமிலி பேரூ​ராட்சி தலைவி ரேணு​காதேவி சரவணன், பெற்​றோர் ஆசிரியர் சங்​கத் தலைவர் சேகர், துணைத் தலை​வர் செல்​வம், தலைமை ஆசிரியை மால​தி, பள்ளி மேலாண்​மைக் குழு தலை​வர் சரஸ்​வ​தி, ஆசிரியர்​கள், மாணவி​கள் கலந்​து​கொண்​டனர்.

Spread the love