July 17, 2026

பழனியில் காமராஜரின் பிறந்த நாள் விழா 

பழனி ஜூலை 16 

பழனி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கட்சி அலுவலகத்தில் காமராஜரின் 124 வது  பிறந்தநாள் விழாவில் அவரின் திரு உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து அடிவாரம் சரவணப் பொய்கை அருகே உள்ள திருவுருவ சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகரத் தலைவர் ஆர் சண்முகநாதன் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் மாநிலச் செயலாளர் மணிக்கண்ணன், திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் ராசியப்பன், மாநில செயற்குழு உறுப்பினர் கனகசபாபதி, பி டி சி நாகராஜன், வட்டாரத் தலைவர்கள் சுந்தர்ராஜன், ராஜேந்திரன், மற்றும் நாகேஸ்வரன், பாலசுப்பிரமணியம், மாவட்ட இளைஞர்அணி தலைவர் சுந்தரபாண்டியன், நகரத் துணைத் தலைவர் திருஞானசம்பந்தம், நகர செயலாளர் கோபால், மாரியப்பன், நகர பொருளாளர் பாஸ்கரன், ஆயக்குடி பேரூர் தலைவர் நாட்டுத்துரை, நெய்க்காரப்பட்டி பேரூர் தலைவர் சண்முகவேல், மாவட்ட செயலாளர் அருண், வீரபாண்டி, கீரனூர் பேரூர் தலைவர் காட்டப்பன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சிவசுப்பிரமணியம், ரூக்வார்பட்டி செல்வம், பெத்தநாயக்கன்பட்டி சண்முகசாமி  மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Spread the love