
பழனி ஏப்ரல் 7
கேரளா மாநிலத்தின் ஆன்மிக தலைவரான ஸ்ரீ நாராயண குரு சமாஜத்தின் 5ஆம் ஆண்டு விழாவும், குடும்ப சங்கமம் நிகழ்ச்சியும் பழனியில் நடைபெற்றது. இதற்கு பழனி கிளை தலைவர் ராஜன் தலைமை வகித்தார். செயலாளர் உன்னிகிருஷ்ணன் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக, பழனி கோயில் நிர்வாக அதிகாரி மாரிமுத்து, பழனி முன்னாள் அதிமுக எம்எல்ஏ வேணுகோபாலு, திருப்பூர் மண்டல தலைவர் கோரல் விஸ்வநாதன், கொடைக்கானல் தலைவர் அரிமா தலைவர் ரவீந்திரன், சாய் கிருஷ்ணா மருத்துவமனை சுப்புராஜ், பொள்ளாச்சி தலைவர் செந்தாமரை, மகளிர் பிரிவு விஜயலட்சுமி, சரிதா, ஆலோசகர் விஜயகுமார், சந்திரசேகர், ஆகியோர் பங்கேற்றனர். விழாவில் குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. பரிசுகள் வழங்கப்பட்டது. கேரளா சிறப்பு விருந்து வழங்கப்பட்டது.

More Stories
கரூர்
22-09-2026
கரூர் மாவட்டம்