March 17, 2026

பழனியில் திமுக கூட்டணி கட்சியினர்  சச்சிதானந்தம் எம்பி தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்

 பழனி மார்ச் 16 

பழனி தாலுகா அலுவலகம் அருகே திண்டுக்கல் எம்பி சச்சிதானந்தம் தலைமையில் திமுக கூட்டணி கட்சியினர் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் நகர திமுக செயலாளர் வேலுமணி, ஒன்றிய செயலாளர் சாமிநாதன், நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி, துணைத் தலைவர் கந்தசாமி, முன்னாள் நாடாளுமன்ற தலைவர் ராஜமாணிக்கம், இளைஞர் அணி லோகநாதன், முன்னாள் நகர் மன்ற  துணைத் தலைவர் எஸ் கே கே ஹக்கீம்,  திமுக நிர்வாகிகள் ஏ கே எம் சக்திவேல்,கவுன்சிலர்கள் சுரேஷ், இந்திரா திருநாவுக்கரசு, விமலா பாண்டியன், சாகுல் அமீது, ஜெபாஸ்டின், திமுக ராஜா, காங்கிரஸ் நிர்வாகிகள் கவுன்சிலர் பத்மினி முருகானந்தம், முத்து விஜயன், முன்னாள் கவுன்சிலர் எஸ் சுந்தர், ராமநாத கிருஷ்ணன், குப்புசாமி, தேவேந்திரன், முகமது அலி, சாயிரா பானு, விடுதலை சிறுத்தைகள் கட்சி பொற்கொடி ஏந்தி,  ஐயப்பன் உள்பட  ஏராளமானவர்கள் பங்கேற்றனர்

Spread the love