பழனி அக்டோபர் 27
பழனி அருகே உள்ளது அழகாபுரி கணேஷ் நகர். இப்பகுதியைச் சேர்ந்தவர் கதிர்வேல் இவரது மகன் சரவணக்குமார் வயது 17. அதே பகுதியைச் சேர்ந்தவர் ரகுராமன் இவரது மகன் மணிகண்டன் வயது 15. இருவரும் நண்பர்கள் ஆவார்கள். இருவரும் நேற்று ராசாபுரம் சாலையில் உள்ள அணை மேட்டு களம் என்ற பகுதிக்கு குளிக்கச் சென்றனர். அப்பொழுது புதரில் மறைந்திருந்த காட்டுப்பன்றி ஒன்று திடீரென்று வெளியே வந்தது. பின்பு இரண்டு பேரையும் ஆக்ரோஷமாக முட்டி தள்ளி தாக்கியது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர் பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

More Stories
தேனி மாவட்டம்
பழனி
திமுகவில் தங்களை இணைத்துக் கொண்ட இளைஞர்கள் ,,,,