பழனி ஆகஸ்ட் 24
பழனி அருகே உள்ளது நெய்க்காரப்பட்டி, இங்கு பெருமாள் புதூர் செல்லும் சாலையில் ஒரு பள்ளிவாசல் உள்ளது. இந்த பள்ளிவாசலின் முன்பகுதியில் ஓலையால் மேற்கூரை வேயப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று முகூர்த்த நாள் என்பதால் ஒரு விசேஷ நிகழ்ச்சியில் வைக்கப்பட்ட பட்டாசு வெடித்து பள்ளிவாசல் மேற்கூரையில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது. அது கண்டு அக்கம் பக்கத்தினர் வேகமாக ஓடிவந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ கட்டுக்கடங்காமல் எரிந்தது. இது பற்றி தகவல் கிடைத்ததும் பழனி தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். நிலைய அலுவலர் காளிதாஸ் தலைமையில் தீயை போராடி அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இது பற்றி பழனி தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

More Stories
பழனி
தேமுதிக சார்பில் கொடியேற்று விழா
பழனிக்கு பெங்களூரில் இருந்து ஆம்னி பஸ்ஸில் 17 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தல்மூன்று பேர் கைது