பழனி பிப்ரவரி 25
பழனி அருகே உள்ளது குதிரை ஆறு அணை பூஞ்சோலை கிராமம். இங்கு உள்ள விவசாயிகள் பட்டா கேட்டும், வெளி நபர்களின் அச்சுறுத்தலை கண்டித்தும், ஆர்ப்பாட்டம் செய்தனர். இதற்கு வழக்கறிஞர் மணிக்கண்ணன் தலைமை வகித்தார். இதில் விவசாயிகள் பழனிச்சாமி, சின்னமுத்து, கோட்டை முத்து, சுதா உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் பெறப்பட்ட நிலத்தில் கடந்த 60 வருடமாக விவசாயம் செய்து வருகின்றோம். ஆனால் முறையான பட்டா இல்லாததால், சில போலியான நபர்கள் எங்களைமிரட்டி, நிலத்தை விட்டு வெளியேறுமாறு கூறுகின்றனர். இதனால் மாவட்ட கலெக்டர் ஆர்டிஓ வட்டாட்சியர் ஆகியோர் நடவடிக்கை எடுக்குமாறு கூறினர்.

More Stories
கொடைக்கானலில் முதல்வர் ஸ்டாலின் சைக்கிள் பயணம்
திருச்செந்தூர் கோயிலில் தவெக தலைவர் விஜய் சாமி தரிசனம்
ஊரெங்கும் மரக்கன்றுகளை நட்டு வைத்து விருதுநகரை பசுமையாக மாற்றும் ஆலமரம் அமைப்பு