June 15, 2026

பழனி அருகே 100 நாள் வேலைக்குச் சென்ற பெண் மரக்கிளை விழுந்து பலி

பழனி ஜூன் 10

 பழனி அருகே உள்ளது  54 புதூர் இந்த ஊரைச் சேர்ந்தவர் மலையப்பன் இவரது மனைவி சின்ன பொண்ணு வயது 55. இவர் நேற்று 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்து வந்தார்  பின்பு மதிய உணவு இடைவேளையின் பொழுது உணவு அருந்தி விட்டு  அப்பகுதியில் உள்ள ஒரு மரத்தின் கீழே அமர்ந்திருந்தார் அப்பொழுது திடீரென்று ஒரு மரக்கிளை முறிந்து சின்ன பொண்ணுவின் மீது விழுந்தது இதில் அவர் படுகாயம் அடைந்து அதே இடத்தில் பலியானார் இது பற்றி பழனி கீரனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்

Spread the love