பழனிமார்ச் 21
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு பழனி சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் பார்வையாளர் தினேஷ் ஜெயின் பழனிக்கு வருகை புரிந்தார். வாக்குச்சாவடிகளின் மையமான பழனியாண்டவர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை பார்வையிட்டார். பின்பு அங்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்து, தேர்தல் அலுவலரிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து கொடைக்கானல் ரோடு பகுதியில் பறக்கும் படையினர் மேற்கொண்ட வாகன சோதனைகளை ஆய்வு செய்தார்செய்தால். இதில் பழனி ஆர்டிஓ கண்ணன், நகராட்சி ஆணையர் டிட்டோ, தாசில்தார் சக்திவேலன், ஆகியோர் உடன் இருந்தனர்.
=========
பழனி பகுதியில் அணைகளின் நீர்மட்டம் குறைகிறது
பழனி மார்ச் 21
பழனி பகுதியில் வரதமாநதி அணை, பாலாறு பொருந்தலாறு அணை, குதிரை ஆறு அணை ஆகிய மூன்று அணைகள் உள்ளது. இந்த அணைகளின் நீர், குடிநீராகவும், விவசாயத்திற்கும், பயன்பட்டு வருகிறது. தற்பொழுது பழனி பகுதியில் போதிய அளவு மழை பெய்யவில்லை. வெயில் கொளுத்துகிறது. இதன்படி 65 அடி உயரம் கொண்ட பாலாறு பொருந்தலாறு அணையின் நீர்மட்டம் தற்பொழுது 9 அடியாக குறைந்துள்ளது. அதேபோல் 66.47 அடி உயரம் கொண்ட, வரதமா நதி அணையின் நீர்மட்டம் 40 அடியாக குறைந்துள்ளது. மேலும் 80 அடி உயரம் கொண்ட குதிரை ஆறு அணையின் நீர்மட்டம் 54 அடியாக குறைந்துள்ளது. மேலும் 3 அணைகளுக்கும் நீர் வரத்து நின்று விட்டது. இதனால் கோடைகாலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு வரும் என்று நினைக்கத் தோன்றுகிறது. அதனால் மழை பெய்தால்தான் பழனியில் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும்

More Stories
கந்திலி கிழக்கு ஒன்றியத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் விழாவில் 100 மரக்கன்றுகள் 500 பேருக்கு அன்னதானம் ஏற்பாடு செய்த. ஒன்றிய செயலாளருக்கு பொது மக்கள் வாழ்த்து
திண்டுக்cIகல்லி CITU மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம் வேலை நிரந்தரம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் மருத்துவ மனைகளும், மருத்துவர்களும் தாக்கப்பட்டு வருவதை கண்டித்து வருகின்ற வெள்ளிக்கிழமை (26.06.26) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெற போவதாக மகப்பேறு மருத்துவ மாநில தலைவர் அமலாதேவி திண்டுக்கல்லில் பேட்டி.