பழனி மார்ச் 27
பழனி பங்குனி உத்திரம் திருவிழாவில் இன்று இரவு வெள்ளி காமதேனு வாகனத்தில் முருகன் வள்ளி தெய்வானை ஆகியோர் திரு உலா வரும் காட்சி நடைபெறுகிறது.
பழனியில் புகழ்பெற்ற பங்குனி உத்திரம் திருவிழா நேற்று காலை 9:30 மணிக்கு திரு ஆவினன்குடி முருகன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று மார்ச் 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரண்டாம் நாள் திருவிழா நடைபெறுகிறது. அதையொட்டி இன்று காலை 9 மணிக்கு முருகப்பெருமான் சன்னதி வீதியில் தந்த பல்லக்கில் திருஉலா வரும் காட்சி நடைபெற்றது. இன்று இரவு எட்டு மணிக்கு முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் வெள்ளி காமதேனு வாகனத்தில் சன்னதி வீதி மற்றும் கிரி வீதிகளில் திருஉலா வரும் காட்சி நடைபெறுகிறது. இதற்கு உபயதாரர்கள் வள்ளுவர் திரைப்பட அரங்கு எஸ் நடராஜன் சன்ஸ், எஸ் செந்தில்குமார், உடுமலை
கணபதிபாளையம் பி ஆர் நாராயணசாமி, ஆகியோர் ஆவார்கள் இதற்கான விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி மாரிமுத்து செய்து வருகிறார்

More Stories
ஒட்டன்சத்திரம் – பெரியகோட்டை கிராமத்தில் விவசாய நிலத்தில் தார்சாலை பணி முதல்வர் ச.ஜோசப் விஜய் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்
ஒட்டன்சத்திரத்தில் தேசிய மருத்துவர்கள் தினம் – பரிசளிப்பு விழா
பாளையக்காட்டில் தார் சாலை அமைக்கும் பணி துவக்க விழா