பழனி – ஈரோடு ரயில் பாதை திட்டத்தை ஒன்றிய அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று பழனி தொகுதி ஐ பி செந்தில்குமார் எம்எல்ஏ கூறினார். பழனி நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை ஐபி செந்தில்குமார் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:
பழனியில் மாவட்ட அரசு மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்காக விரைவில் திறக்கப்பட உள்ளது. காவிரி கூட்டு குடிநீர் திட்டம் 70வது சதவீத குடியிருப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பகுதிகளுக்கு விரைவில் வழங்க பணிகள் நடைபெற்று வருகின்றன. பழனி தனி மாவட்டம் எதிர்காலத்தில் உருவாக்கப்படும். பழனி மேற்கு தொடர்ச்சி மலை விரிவாக்க திட்டத்திற்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்கவில்லை. என்பதை பாரதிய ஜனதா கட்சியினர் ஒன்றிய அரசிடம் வலியுறுத்த வேண்டும். பழனி – ஈரோடு ரெயில் பாதை திட்டம் பழனி – கொடைக்கானல் ரோப் கார் திட்டம் ஆகிய பணிகளை துவங்க இங்குள்ள பாரதிய ஜனதா கட்சியினர் ஒன்றிய அரசிடம் வலியுறுத்த வேண்டும். நடவடிக்கை எடுக்க கூற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். விழாவில் நகர மன்ற தலைவர் உமா மகேஸ்வரி, நகராட்சி ஆணையர் டிட்டோ, திமுக நகர செயலாளர் வேலுமணி, மாவட்ட மாணவரணி அஸ்வின் பிரபாகரன், நகர நகர இளைஞரணி லோகநாதன் உட்பட ஏராளமான பங்கேற்றனர்

More Stories
வேலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் 3 நாள் மிதமான பனிமூட்டம் நிலவ வாய்ப்பு
மதுரை மாநகராட்சி பட்ஜெட் முக்கிய அம்சங்கள்: மீனாட்சியம்மன் கோயில் சுற்றுப்புற மேம்பாட்டுக்கு ரூ.450 கோடி!
பல குடும்பங்களின் தலையெழுத்தை திமுக அரசு மாற்றியுள்ளது: முதல்வர் ஸ்டாலின்