April 3, 2026

பழனி முருகன் கோவில் பங்குனி உத்திரம் திருவிழாவில் நேற்று திருத்தேரோட்டம் நடைபெற்றது 

பழனி ஏப்ரல் 2 

பழனி முருகன் கோவில் பங்குனி உத்திரம் திருவிழாவையொட்டி, திருத்தேரோட்டம் நடைபெற்றது.

 பழனியில் புகழ்பெற்ற பங்குனி உத்திரம் திருவிழா, கடந்த மார்ச் 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று 7ஆம் நாள் திருவிழாவையொட்டி, கிரிவீதியில் மாலை 4. 30 மணி அளவில், திருத் தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக பக்தர்கள் திருத்தேரில் வீற்றிருந்த முருகன் வள்ளி தெய்வானை ஆகியோரை பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். திருத்தேர் நான்கு கிரிவீதிகளிலும் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, திருத்தேர் உலா வந்தது. முன்னதாக பக்தர்கள் தீர்த்தக்காவடி, மயில் காவடி, இளநீர் காவடி, பஞ்சாமிர்தக் காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகளை எடுத்து வந்து முருகப்பெருமானை பயபக்தியுடன் வழிபாடு செய்தனர்

Spread the love