
Follow Us
புதுடெல்லி: ஆக்கிரமிப்பு காஷ்மீர், அக்சாய் சின் பகுதிகளை உள்ளடக்கிய இந்திய வரைபடம் தொடர்பான சமூக வலைதள பதிவை அமெரிக்கா நீக்கி உள்ளது.
கடந்த 1947-ல் இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின்போது காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்தது. அது ஆக்கிரமிப்பு காஷ்மீர் எனப்படுகிறது. அதன் பிறகு கடந்த 1963-ம் ஆண்டில் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் 5,180 சதுர கி.மீ. பகுதியை சீனாவுக்கு பாகிஸ்தான் வழங்கியது. அதை சீனா அக்சாய் சின் என்று அழைக்கிறது.
ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் அக்சாய் சின் ஆகியவை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று மத்திய அரசு உறுதியாக கூறி வருகிறது. ஆனால் இவற்றை பிரச்சினைக்கு உரிய பகுதி என அமெரிக்கா கூறி வந்தது.
இந்த சூழலில் இந்தியா, அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக இருப்பதை கவுரவிக்கும் வகையில், அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகம் எக்ஸ் சமூக வலை தளத்தில் கடந்த 7ம் தேதி இந்திய வரைபடத்தை வெளியிட்டது.
அதில் ஆக்கிரமிப்பு காஷ்மீர், அக்சாய் சின் ஆகியவை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகளாக இடம் பெற்றிருந்தன. இந்நிலையில், அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகம் அந்த பதிவை நீக்கி உள்ளது.

More Stories
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவைக் குறி வைத்து ஒரே இரவில் 1,000 ட்ரோன்கள் ஏவி உக்ரைன் தாக்குதல்
மேற்கு ஆசியப் போரை நிறுத்த அமெரிக்காவுக்கு 7 நிபந்தனைகளை விதித்த ஈரான்
இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 100% வரி – மசோதாவுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒப்புதல்