April 1, 2026

பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு.. அண்ணாமலை பெயர் இடம்பெறுமா? டெல்லிக்கு போன ரிப்போர்ட்!

2026 கான தமிழக சட்டமன்ற் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழக பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது .

தமிழக பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது. இதற்காக டெல்லியில் இருந்து மத்திய உள்துறை அமைச்சரும் தமிழ்நாடு பாஜக பொறுப்பாளருமான பியூஸ் கோயல் சென்னைக்கு வருகை தர உள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல்

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்று ஒரே இலக்குவுடன் அதிமுக தலைமையில், பாஜக மீண்டும் கூட்டணி அமைத்துள்ளது. அந்த வகையில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜகவுக்கு 27 தொகுதிகளை பாஜக ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால் அதிமுக பலம் வாய்ந்த தொகுதிகளை பாஜக கேட்பதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

  

இதனால், தொகுதி பங்கீடு இறுதி செய்வதில் சிக்கல் நீடித்தது. பின்னர் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சென்னை வந்து எடப்பாடி பழனிசாமி மற்றும்  கூட்டணியில் அங்கம் வகிக்கும் டிடிவி தினகரன் அன்புமணி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி சுமுகமான முடிவு எட்டப்பட்டது.இதனைத் தொடர்ந் து பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில்,

நெருக்கடியில் திமுக! கூட்டணி என்னாகும்?

தமிழக பாஜக வேட்பாளர்கள் பட்டியல் 2026

  • மயிலாப்பூர்
  • தளி
  • மொடக்குறிச்சி
  • உதகை
  • அவிநாசி
  • திருப்பூர் தெற்கு
  • கோவை வடக்கு
  • கந்தர்வகோட்டை
  • புதுக்கோட்டை
  • திருப்பத்தூர்
  • மதுரை தெற்கு
  • சாத்தூர்
  • திருச்செந்தூர்
  • வாசுதேவநல்லூர்
  • ராதாபுரம்
  • நாகர்கோவில்
  • விளவங்கோடு
  • ஆவடி
  • திருவண்ணாமலை
  • தஞ்சாவூர்
  • திருவாரூர்
  • அறந்தாங்கி
  • ராசிபுரம்
  • ராமநாதபுரம்
  • பத்மநாபபுரம்
  • மானாமதுரை
  • குளச்சல்

உள்ளிட்ட பல தொகுதிகளில் பாஜக போட்டியிட உள்ளது.இதனைத் தொடர்ந்து, தமிழக பாஜக வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் சென்னை கமலாலயத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பாஜக தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ் தலைமை தாங்கினார்.தொடர்ந்து ஒவ்வொரு தொகுதியிலும் மூன்று பேர் கொண்ட பட்டியல் தயாரித்து அது தேசிய தலைமையிடம் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில்,மத்திய அமைச்சரும் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் இன்று சென்னைக்கு வர உள்ளார்.பாஜக வேட்பாளர்களின் இறுதி பட்டியல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தல் பாஜக வேட்பாளர்கள் யார்?

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் பாஜக உத்தேச பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் மயிலாப்பூர் தொகுதியில் தமிழிசை சவுந்திரராஜன், அவிநாசியில் எல். முருகன், சீனிவாசன், திருப்பூர் தெற்கில் ஏ.பி. முருகானந்தம் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியானது.

மேலும், இந்த முறை கோவை தெற்கு மாற்றப்பட்டு கோவை வடக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் வானதி சீனிவாசன் போட்டியிட உள்ளார். அதே போல் அண்ணாமலையும் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை என்று டெல்லி தலைமைக்கு அண்ணாமலை சொல்லியிருந்தாலும் கூட அவர் கோவை வடக்கு போட்டியிட விருப்புவதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுகள் அடிப்பட்டு வருகிறது.

குறிப்பாக , கவுண்ட பாளையம் , பல்லடம் உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட காய் நகர்த்தி வந்த நிலையில், ஆனால் அதிமுக தரப்பில் கோவை வடக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. கோவை வடக்கில் யார் போட்டியிடுவார் என்ற குழப்பம் நிலவி வருகிறது. என்னதாக கோவை வடக்கில் வானதி போட்டியிட அதிகம் வாய்புகள் இருந்தாலும் கூட அண்ணாமலையும் அதற்கான முயற்சிகளையும் செய்து வருவதாக கூறப்படுகிறது.

Spread the love