
இராமநாதபுரம் மாவட்ட பாசிட்டிவ் நெட்வொர்க் கூட்டமைப்பில் கூட்டு மாத்திரை (ART) சிகிச்சை பெற்று வரும் 40 எச்ஐவி பயனாளிகளுக்கு பாவை பவுண்டேஷன் சார்பில் ஊட்டச்சத்து உணவு பொருட்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் இராமநாதபுரம்
பாசிட்டிவ் நெட்வோர்க் கூட்டமைப்பு தலைவர் முனீஸ்வரி தலைமையில்
பாவை பவுண்டேஷன் இராமநாதபுரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கணகராஜ் முன்னிலையில் பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவு பொருள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டன. எச்ஐவி சிகிச்சையின் பயன்திறனை அதிகரித்து, உடல்நலத்தை மேம்படுத்தவும், வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் இவ்வூட்டச்சத்து தொகுப்பு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
நெட்வொர்க் கூட்டமைப்பு தலைவர், திட்ட மேலாளர் மற்றும் களப்பணியாளர்கள் கலந்து கொண்டனர். பயனாளிகள் பாவை பவுண்டேஷன் நிர்வாகத்துக்கு நன்றி தெரிவித்தனர்.

More Stories
முதல்வர் விஜய் பிறந்தநாள், அமைச்சர் ம விஜய்பாலாஜி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!
தமிழ்நாடு முதலமைச்சர் சி ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஈரோடு மரப்பாலம் பகுதி கழக செயலாளர் சாதிக் பாட்ஷா ஏற்பாட்டில் 500க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள்