June 15, 2026

பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினர் பிரிவு மாணவர்கள் சென்னை அரசு கல்லூரி விடுதிகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை: சென்னை மாவட்​டத்​தில் உள்ள பிற்​படுத்​தப்​பட்​டோர், மிகப் பிற்​படுத்​தப்​பட்​டோர் மற்​றும் சிறு​பான்​மை​யினர் மாணவர்​கள், அரசு கல்​லூரி விடு​தி​களில் சேர விண்​ணப்​பிக்​கலாம் என, மாவட்ட ஆட்​சி​யர் எஸ்​.​மாலதி ஹெலன் தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக, அவர் வெளி​யிட்ட செய்​திக் குறிப்பு: சென்னை மாவட்​டத்​தில், தமிழக அரசின் சார்​பில் பிற்​படுத்​தப்​பட்​டோர், மிகப் பிற்​படுத்​தப்​பட்​டோர் மற்​றும் சிறு​பான்​மை​யினர் மாணவ, மாண​வியருக்கு 12 அரசு கல்​லூரி மாணவர் விடு​தி​கள், 6 அரசு கல்​லூரி மாண​வியர் விடு​தி​கள் என மொத்​தம் 18 அரசு விடு​தி​கள் செயல்​பட்டு வரு​கின்​றன. கலை மற்​றும் அறி​வியல் பட்​டப் படிப்​பு​கள், பட்​டமேற்​படிப்​பு​கள், ஐடிஐ, பாலிடெக்​னிக் போன்ற படிப்​பு​களில் பயிலும் மாணவ, மாண​வியர் இந்த விடு​தி​களில் தங்கி படிக்​கலாம்.

விடு​திக்கு எவ்​வித கட்​ட​ண​மும் இல்​லை.அதே​போல், முகாம்​வாழ் இலங்கை தமிழர்​களின் குழந்​தைகளுக்கு என தனியே 5 இடங்​கள் சிறப்பு ஒதுக்​கீ​டாக ஏற்​படுத் ​தப்​பட்​டுள்​ளன. விடுதிகளில் சேர விரும்​பும் மாணவர்​களின் பெற்​றோரது ஆண்டு வரு​மானம் ரூ.2 லட்​சத்​துக்கு மிகாமல் இருக்க வேண்​டும்.

மாணவர்​களின் இருப்​பிடத்​தில் இருந்து பயிலும் கல்வி நிலை​யத்​தின் தொலைவு குறைந்​த​பட்​சம் 8 கிமீ தூரத்​துக்கு மேல் இருக்க வேண்​டும். தகு​தி​யுடைய மாணவ, மாண​வியர் சம்​பந்​தப்​பட்ட விடுதி காப்​பாளர் அல்​லது மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கத்​தில் செயல்​பட்டு வரும் மாவட்ட பிற்​படுத்​தப்​பட்​டோர் நல அலு​வல​கத்​தில் இருந்து விண்​ணப்​பங்​களை பெற்​று, பூர்த்தி செய்​து, உரிய விடுதி காப்​பாளர் அல்​லது மாவட்ட பிற்​படுத்​தப்​பட்​டோர் நல அலு​வல​கத்​தில் வரும் ஜூலை 15-ம் தேதிக்​குள் சமர்ப்​பிக்க வேண்​டும்.

சாதி சான்​றிதழ், வரு​மான சான்​றிதழ் போன்​றவற்றை இணைக்க தேவை​யில்​லை. விடு​தி​யில் சேரும் போது சான்​றிதழ்​களை அளித்​தால் போது​மானது. இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.

Spread the love