சென்னை: கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகளை ஒன்றான புனித வெள்ளி தினமான வரும் ஏப்.3 -ம் தேதியன்று, மதுக்கடைகளை மூட உத்தரவிட வேண்டும் என தமிழக, அரசுக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: உலக மக்களை பாவத்திலிருந்து மீட்பதற்காக இயேசு கிறிஸ்து தன் உயிரை தியாகம் செய்து கொடுத்த நாள் புனித வெள்ளியாக அனுசரிக்கப்படுகிறது.
கிறிஸ்துவ மக்களின் புனித நாட்களில் ஒன்றாக கருதப்படும் புனித வெள்ளியை முன்னிட்டு, பெரும்பாலான கிறிஸ்தவர்கள் விரதம் இருப்பதும், தேவாலயங்களுக்கு சென்று வழிபடுவதும் வழக்கம்.
பொதுமக்களுக்கு இடையூறு கிறிஸ்தவர்கள், அவர்களது புனித தினமான புனித வெள்ளியை அனுசரிக்கும் வேளையில் மதுக்கடைகளை திறந்திருப்பது அவர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக இருக்கும்.
தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டு இருக்கும் சூழலில், மதுக்கடைகளை அதிகப்படுத்தி மதுவை தாராளமயமாக்கி, குற்றங்கள் அதிகரிக்கச் செய்திருப்பது திமுக ஆட்சியின் வேதனையான சாதனையாக இருக்கிறது.
குறிப்பாக, பள்ளி, கல்லூரி முதல் கோயில், தேவாலயம் வரை செல்லும் வழியெல்லாம் மதுக்கடைகள் இருப்பது கொடுமையானது.
எனவே, புனித வெள்ளியன்று மதுக்கடைகளை மூட வேண்டும் என கிறிஸ்தவர்கள் வைத்த கோரிக்கையின் படி, ஏப்.3-ம் தேதி புனித வெள்ளி அன்று, தமிழகம் முழுவதும் உள்ள மதுக்கடைகளை மூடுவதற்கான அறிவிப்பை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும். இவ்வாறு ஜி.கே.வாசன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

More Stories
புதுச்சேரி | விஜய் கேட்டது 23; அனுமதித்தது 4: வீடியோ பிரச்சாரத்துக்கு திட்டமா?
தவெக வேட்பாளர் பட்டியலில் மாற்றம்! விஜயுடன் கைகோர்க்கும் முக்கிய தலைவர்கள் யார்?
வெளியானது பாமக தேர்தல் அறிக்கை… அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் என்னென்ன இருக்கிறது தெரியுமா?