May 5, 2026

புஸ்ஸி ஆனந்த்… அன்று புதுச்சேரி எம்எல்ஏ, இன்று தமிழக எம்எல்ஏ!

புதுச்சேரி: நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அதிக இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உயர்ந்துள்ளது. கட்சியின் தலைவரான விஜய் விரைவில் தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளார்.

இந்நிலையில், தவெக பொதுச் செயலாளரான புஸ்ஸி ஆனந்த், சென்னை தியாகராய நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக புஸ்ஸி ஆனந்த் புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 2006-ம் ஆண்டு புஸ்ஸி தொகுதியில் முன்னாள் அமைச்சர் கண்ணன் கட்சியான புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவாக இருந்தவர்.

விஜய் கட்சி தொடங்கியவுடன் தனது வாக்கை செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கர் தொகுதிக்கு இடமாற்றம் செய்து கொண்டார் புஸ்ஸி ஆனந்த். இப்போது தமிழகத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் புஸ்ஸி ஆனந்த்துக்கு 2 மாநிலங்களில் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவர் என்ற பெருமை கிடைத்துள்ளது.

Spread the love