புதுடெல்லி: மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிக்கையில் கூறியிருப்பதாவது: பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றுமதிக்கான ‘சாலை மற்றும் உள் கட்டமைப்பு வரி’ முற்றிலும் நீக்கப்படுகிறது. அதே வேளையில், உள்நாட்டுப் பயன்பாட்டிற்காக விநியோகிக்கப்படும் பெட்ரோல், டீசல் மீதான தற்போதைய வரி விகிதங்களில் மாற்றம் இல்லை.
பெட்ரோல் ஏற்றுமதிக்கான கூடுதல் லாப வரி பாதியாகக் குறைக்கப்பட்டு, ஒரு லிட்டருக்கு ரூ.1.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல், டீசல் ஏற்றுமதி மீதான வரி லிட்டருக்கு ரூ.16.50-லிருந்து ரூ.13.50 ஆகவும், விமான எரிபொருள் மீதான வரி லிட்டருக்கு ரூ.16-லிருந்து ரூ.9.50 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More Stories
பிலிப்பைன்ஸ், வியட்நாமை தொடர்ந்து இந்தோனேசியாவுக்கும் பிரம்மோஸ் ஏவுகணை விற்பனை
‘பெண்கள் பலம் வாழ்வாதாரம்’ என்ற பெயரில் பெண்களின் பொருளாதார முன்னேற்றத்தை வலியுறுத்தும் நிகழ்ச்சி
சாம்சங் செமி கண்டக்டர் பிரிவு ஊழியர்களுக்கு தலா ரூ.3.25 கோடி போனஸ்