July 15, 2026

மகாராஷ்டிராவில் மாதம்தோறும் ரூ.1,500 வழங்கும் திட்டத்தில் 92 லட்சம் பெண்கள் தகுதி நீக்கம்

மும்பை: மகா​ராஷ்டிரா அரசு ‘மாஜி லட்கி பஹின் யோஜ​னா’ என்ற திட்​டத்தை அமல்​படுத்தி வரு​கிறது. இதில் 2.4 கோடி பேர் பயன்​பெற்று வந்தனர். இத்​திட்​டத்​தின் கீழ் தகு​தி​யுள்ள ஏழை மற்றும் நடுத்​தரக் குடும்​பப் பெண்​களுக்கு மாதந்​தோறும் ரூ.1,500 வழங்​கப்​படு​கிறது.

இத்​திட்​டத்​தில், இ-கேஒய்சி சரி​ பார்ப்பு பணி​களை பயனாளி​கள் 8 மாத அவகாசத்​திற்​குள் பூர்த்தி செய்ய வேண்​டும் என்று அம்​மாநில அரசு அறி​வித்​திருந்​தது. இந்த விவரங்​களை முழு​மை​யாக சமர்ப்​பிக்​காத சுமார் 80 லட்​சம் பேரை திட்​டத்​திலிருந்து அம்​மாநில அரசு நீக்​கி​யுள்​ளது. இதன் ​மூலம் இதற்கு முன் நீக்​கப் ​பட்டவர்​களின் எண்​ணிக்​கை​யை​யும் சேர்த்​து, தற்​போது நீக்கப்பட்டோர் எண்​ணிக்கை 92 லட்​சத்​தைக் கடந்​துள்​ளது.

இதையடுத்து மொத்​த​முள்ள 2.4 கோடி பயனாளி​களில் தற்​போது 38 % பேர் குறைக்​கப்​பட்​டுள்​ளனர். பல்​வேறு காரணங்​களின் அடிப்படை​யில் இந்த தகுதி நீக்​கம் செய்​யப்​பட்​டுள்​ளது. சுமார் 50 முதல் 55 லட்​சம் பெண்​கள் இ-கேஒய்சி நடை​முறையை முடிக்கவில்​லை. 12 லட்​சம் பெண்​களின் வரு​மானம் நிர்ணயிக்கப்பட்ட வரு​மான வரம்​பைத் தாண்​டி​யுள்​ளது.

4.5 லட்​சம் பேர் 65 வயது வரம்​பைக் கடந்​தவர்​கள். இத்​திட்​டத்​தில் முறை​கே​டாக பலன் பெற முயன்ற 14,000 ஆண்​களின் பெயர்களும் நீக்​கப்​பட்​டுள்​ளன. நீக்​கப்​பட்​ட​வர்​களின் பட்​டியலில் மாநிலத்​திலேயே அதி​கபட்​ச​மாக பீட் மாவட்​டத்​தில் 28 லட்​சம் பெண்​கள் நீக்​கப்​பட்​டுள்​ளனர்.

Spread the love