மதுரை: சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், நக்கீரன் இதழ் 234 தொகுதிகளுக்கான கருத்துக்கணிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன்படி மதுரையில் 6 தொகுதியை திமுகவும், 3 தொகுதியை அதிமுகவும், ஒரு தொகுதி இழுபறியில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் 5ல் திமுக வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடக்கவுள்ளது. இம்முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாதக மற்றும் தவெக என்று 4 முனைப்போட்டி நிலவி வருகிறது. இதனால் எந்த தொகுதியில் யார் வெல்வார்கள் என்பதே சாமானிய மக்களின் விவாதமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் நக்கீரன் இதழ் தரப்பில் 234 தொகுதிகளுக்கான கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. நக்கீரன் கருத்துக்கணிப்பு ஏற்கனவே நக்கீரன் கருத்துக்கணிப்பின் முதல் பகுதி தொடர்பாக ஒன் இந்தியா தமிழ் ஏராளமான தகவல்களை வெளியிட்டது. இந்த நிலையில் அடுத்தக்கட்ட கருத்துக்கணிப்புகள் வெளியாகி இருக்கின்றன. அதில் மதுரை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள ஒவ்வொரு தொகுதியிலும் யாருக்கு சாதகம் இருக்கிறது என்பதை பார்க்கலாம். மதுரை கிழக்கு, மேலூர் தொகுதி நிலவரம் மதுரையை பொறுத்தவரை 10 தொகுதிகளில் இருக்கின்றன. மதுரை மேலூர் தொகுதியில் அதிமுக கூட்டணி 43% வாக்குகளையும், காங்கிரஸ் கட்சி 41% வாக்குகளையும், தவெக 8% வாக்குகளையும் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை கிழக்கு தொகுதியில் திமுக 44% வாக்குகளையும், அதிமுக 39% வாக்குகளையும், தவெக 11% வாக்குகளையும் பெறும் என்று கூறப்பட்டுள்ளது. மதுரை வடக்கு, மதுரை தெற்கு நிலவரம் சோழவந்தான் தொகுதியில் திமுக 50% வாக்குகளையும், அதிமுக 35% வாக்குகளையும், தவெக 8% வாக்குகளையும் கைப்பற்றும் என்று தெரிகிறது. மதுரை வடக்கு தொகுதியில் திமுக 43% வாக்குகளையும், அதிமுக 39% வாக்குகளையும், தவெக 11% வாக்குகளையும் பெறும் என்றும், மதுரை தெற்கு தொகுதியில் திமுக 44% வாக்குகளையும், பாஜக 36% வாக்குகளையும், தவெக 12% வாக்குகளையும் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Powered By SKIP திருப்பரங்குன்றம் தொகுதி நிலவரம் மதுரை மத்திய தொகுதியில் திமுக 46% வாக்குகளையும், அதிமுக 36% வாக்குகளையும், தவெக 11% வாக்குகளையும் கைப்பற்றும் என்றும், மதுரை மேற்கு தொகுதியில் அதிமுக 43% வாக்குகளையும், திமுக 41% வாக்குகளையும், தவெக 10% வாக்குகளையும் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் தொகுதியில் திமுக மற்றும் அதிமுக தலா 43% வாக்குகளோடு இழுபறி நீடிப்பதாகவும், தவெக 10% வாக்குகளை பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமங்கலம், விளாத்திகுளம் தொகுதி நிலவரம் தொடர்ந்து, திருமங்கலம் தொகுதியில் திமுக 44% வாக்குகளும், அதிமுக 42% வாக்குகளும், தவெக 7% வாக்குகளும் கைப்பற்றும் என்றும், உசிலம்பட்டி தொகுதியில் அதிமுக 44% வாக்குகளும், திமுக 40% வாக்குகளும், தவெக 8% வாக்குகளையும் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம் தொகுதியில் திமுக 48% வாக்குகளையும், அதிமுக 36% வாக்குகளையும், தவெக 8% வாக்குகளையும் பெறும் என்று கூறப்பட்டுள்ளது. தூத்துக்குடி, கோவில்பட்டி தொகுதி நிலவரம் தூத்துக்குடி தொகுதியில் திமுக 44% வாக்குகளையும், அதிமுக 34% வாக்குகளையும், தவெக 12% வாக்குகளையும் கைப்பற்றும் என்றும், திருச்செந்தூர் தொகுதியில் திமுக 46% வாக்குகளையும், அதிமுக 37% வாக்குகளையும், தவெக 10% வாக்குகளையும் பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் திமுக 45% வாக்குகளையும், அதிமுக 38% வாக்குகளையும், தவெக 8% வாக்குகளையும் பெறும் என்றும், ஒட்டப்பிடாரம் தொகுதியில் திமுக 43% வாக்குகளையும், அதிமுக 39% வாக்குகளையும், தவெக 9% வாக்குகளை பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவில்பட்டி தொகுதியில் அதிமுக 44% வாக்குகளையும், திமுக 38% வாக்குகளையும், தவெக 11% வாக்குகளையும் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் திமுக 6, அதிமுக 3.. தூத்துக்குடியில் திமுக 5, அதிமுக 1.. நக்கீரன் வெளியிட்ட மெகா சர்வே!

More Stories
கடைசி நாள் பரப்புரையில் பேச முடியாமல் கண் கலங்கிய செங்கோட்டையன்.. என்ன காரணம்?
அக்காடா.. தம்பிடா.. வானதி சீனிவாசனுடன் ஒரே பைக்கில் அண்ணாமலை பிரச்சாரம்!
”நான் உதயசூரியனாகவே மாறிவிட்டேன்” – பிரேமலதா நெகிழ்ச்சி