17 வயது சிறுவனின் ரத்தம் மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே மண்ணில் சிந்தி கிடக்கிறது என தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வேதனை தெரிவித்துள்ளார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகிலுள்ள வடக்கு ஆவணி மூல வீதியில் மாநகராட்சிக்கு சொந்தமான கார் பார்க்கிங் பகுதி செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியில் நேற்று நள்ளிரவு அதிர்ச்சிகரமான கொலை சம்பவம் ஒன்று நடைபெற்றது. குபேந்திரன் என்ற சிறுவன் அங்கு நின்றுகொண்டிருந்த போது இரண்டு பைக்குகளில் வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் அவரை அரிவாளால் சரமாரியாக தாக்கி கொலை செய்து விட்டு தப்பிச் சென்றது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகில் 17 சிறுவன் கொலை
சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் விளக்குத்தூண் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, இந்த கொலை முன்விரோதம் காரணமாக நடந்தது தெரியவந்தது. கடந்த மாதம் நடைபெற்ற சித்திரைத் திருவிழாவின் போது குபேந்திரனுக்கும் அதே பகுதியை சேர்ந்த முத்துமணி என்ற இளைஞருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட மோதலில் முத்துமணிக்கு காயம் ஏற்பட்டிருந்தது.
தேர்தலுக்கு பின்னால் நடந்த சம்பவம்! உண்மை உடைத்த திமுக நிர்வாகி! – aandal priyadharshini
இதனால் ஆத்திரமடைந்த முத்துமணி தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து குபேந்திரனை பழிவாங்க திட்டமிட்டதாக காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். நேற்று இரவு குபேந்திரன் கார் பார்க்கிங் அருகே நின்றுகொண்டிருந்த போது, முத்துமணி, அவரது தம்பி ராஜ், சதீஷ்குமார், ஹரிகிருஷ்ணன் மற்றும் முத்துக்குமார் ஆகியோர் சேர்ந்து அவரை தாக்கியுள்ளனர். உயிர் தப்பிக்க குபேந்திரன் ஓட முயன்றபோதும், கும்பல் அவரை விரட்டிச்சென்று வெட்டிக்கொலை செய்ததாக கூறப்படுகிறது.
முன்விரோதம் காரணமாக நடந்த கொடூர சம்பவம்
கொலை செய்யப்பட்ட குபேந்திரனின் உடலை காவல்துறையினர் கைப்பற்றி, உடற்கூறாய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும், வடக்கு ஆவணி மூல வீதியில் உள்ள கார் பார்க்கிங் பகுதியில் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். அங்கு சிலர் மது அருந்துவது போதைப் பொருட்கள் பயன்படுத்துவது போன்ற சட்டவிரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே மீனாட்சி அம்மன் கோவில் போன்ற முக்கிய பகுதியை சுற்றியுள்ள இடங்களில் காவல்துறையினர் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அண்ணாமலை பதிவு
இந்த நிலையில், 17 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியீருப்பதாவது: இந்த வீடியோவில் நீங்கள் பார்க்கும் ரத்தக்கறைகள், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே ஐந்து பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட இளைஞருடையவை.
தமிழ்நாட்டில் போதைப்பொருள் விற்பனையாளர்கள், பாலியல் குற்றவாளிகள் மற்றும் கொலை குற்றங்களில் ஈடுபடுபவர்கள் அச்சமின்றி செயல்படும் நிலை உருவாகியுள்ளது. கடந்த சம்பவங்களில் இருந்தும் மாநில காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொள்ளாதது போல தெரிகிறது. அதே நேரத்தில், புதிய டிவிகே அரசு இன்னும் கொண்டாட்ட மனநிலையிலேயே இருந்து, தரையில் நடைபெற்று வரும் கடுமையான சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை முழுமையாக எதிர்கொள்ளாமல் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

More Stories
திருவான்மியூரில் பள்ளி, கோயில் அருகே விதிகளை மீறி செயல்படும் டாஸ்மாக் கடையை மூட கோரிக்கை
பழனி பகுதிகளில் வாய்க்கால்களை தூர் வார வேண்டும்
26-05-26