புதுக்கோட்டை மாவட்ட அதிமுக அலுவலகத்தின் சாவியை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கியதை அடுத்து, புதிய மாவட்டச் செயலாளர் பழனிவேல் அலுவலகத்தை திறந்தார்.
அதிமுகவில் நீடித்து வரும் உட்கட்சி பூசல் விவகாரம் காரணமாக, புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை நீக்கியதை தொடர்ந்து, அதிமுக மாவட்ட கழக அலுவலகத்தின் கட்டுப்பாட்டை சுற்றிய சர்ச்சைகள் கடந்த சில நாட்களாக அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறி இருக்கிறது.
அதிமுக புதிய மாவட்டச் செயலாளர்
2026 தேர்தல் முடிவுக்கு பின்னர் சட்டப்பேரவையில் தவெக பெரும்பான்மையை நிரூபிக்கும் போது, அதிமுக இரு அணியாக மாறியது. அதன் காரணமாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கினார். அதனை தொடர்ந்து புதிய மாவட்டச் செயலாளராக பழனிவேல் நியமிக்கப்பட்டார்.
புதுக்கோட்டையில் சர்ச்சை
எடப்பாடி பழனிசாமி அணி, சி.வி. சண்முகம் அணி என இரண்டு அணிகளாகப் பிரிந்த நிலையில், சி.வி. சண்முகத்தை தவிர அந்த அணியில் இருந்தோர் எடப்பாடி பழனிசாமி உடன் இணைந்ததை அடுத்து ஓரணி ஆகினர். அந்த அணியில் இருந்த விஜயபாஸ்கரை முன்னிலைப்படுத்தி புதுக்கோட்டை மாவட்ட கழக அலுவலகத்திலும் பல்வேறு சர்ச்சைகள் கிளம்பி வந்தன.
இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை
புதுக்கோட்டை மாவட்ட அதிமுக அலுவலகத்தின் சாவி, புதிய நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படாததால் இரு தரப்பினருக்கும் இடையே கருத்து வேறுபாடு உருவானது. இந்த விவகாரம் தீவிரமடைந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சமரச முயற்சிகளை மேற்கொண்டது. இதன் ஒரு பகுதியாக வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
நிர்வாக கட்டுப்பாடு
இந்தக் கூட்டத்தில் விஜயபாஸ்கர் தரப்பில் அவரது வழக்கறிஞர் மட்டுமே பங்கேற்றதாக கூறப்படுகிறது புதிய மாவட்ட செயலாளர் தரப்பும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த சூழலில் மாவட்ட கழக அலுவலகத்தின் உரிமை மற்றும் நிர்வாக கட்டுப்பாடு தொடர்பான பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
கட்சி நிர்வாக மாற்றம் அறிவிக்கப்பட்ட பிறகு அலுவலகத்தின் பொறுப்புகள் புதிய நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை ஒரு தரப்பினர் வலியுறுத்திய நிலையில் மற்றொரு தரப்பு தனது கருத்துக்களை பதிவு செய்ததாக தகவல் வெளியானது.
அலுவலக சாவி ஒப்படைப்பு
இந்த நிலையில் இன்று மீண்டும் அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அந்தக் கூட்டம் நடைபெறுவதற்கு முன்பாகவே நேற்று இரவு முக்கிய திருப்பம் ஏற்பட்டது. விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் மாவட்ட கழக அலுவலகத்தின் சாவியை புதிய மாவட்டச் செயலாளர் பழனிவேலுவிடம் ஒப்படைத்தனர். இதன் மூலம் கடந்த சில நாட்களாக நீடித்து வந்த இழுபறி முடிவுக்கு வந்தது.
விஜய் வந்த பிறகு இது மாறியுள்ளது! உடைத்து பேசிய காங்கிரஸ் எம்.பி!இதனை அடுத்து இன்று காலை புதிய மாவட்ட செயலாளர் பழனிவேல் தலைமையில் மாவட்ட கழக அலுவலகம் திறக்கப்பட்டது. புதிய நிர்வாகத்தின் கீழ் கட்சிப் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
சி.வி. சண்முகம் விவகாரம்
இதற்கு முன்பாக விழுப்புரம் மாவட்டத்திலும் சி.வி.சண்முகத்துக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் போர்க்கொடி தூக்கினர். அப்போதும் அதிமுக மாவட்ட அலுவலகத்தின் சாவி பிரச்சனை எழுந்தது. இறுதியில் எடப்பாடி பழனிசாமி தரப்பினரிடம் அலுவலகத்தின் சாவி ஒப்படைக்கப்பட்டு, புதிய மாவட்டச் செயலாளர் பசுபதி அலுவலகத்தை திறந்தார். அப்போது சி.வி. சண்முகத்துக்கு ஆதரவாக அங்கிருந்த பேனர்கள் அனைத்தும் அகற்றப்பட்ட சம்பவம் குறிப்பிடத்தக்கது.

More Stories
ராமநாதபுரம் மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக சிவகுரு பிரபாகரன் ஐ.ஏ.எஸ் பொறுப்பேற்றுக் கொண்டார்.
தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைவளர்ச்சிபணிகள் சம்பந்தமாக
தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு..முதல் நாளிலேயே நலத்திட்டப் பொருட்கள் விநியோகம் – அரசு உத்தரவு