சரத் பவார் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவது பற்றி..

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் புணே மருத்துவமனையில் இருந்து இன்று வீடு திரும்புவார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
85 வயதான மாநிலங்களவை உறுப்பினர் சுவாசிப்பதில் சிரமம் மற்றும் தொடர்ச்சியான இருமல் காரணமாக, இந்த வார தொடக்கத்தில் புணேவின் பாராமதி நகரில் உள்ள அவரது இல்லத்திலிருந்து ரூபி ஹால் கிளினிக்கிற்கு அழைத்து வரப்பட்டார்.
சரத் பவார் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும், குணமடைந்துவிட்டதாகவும் மருத்துவமனையின் தலைமை இருதய நோய் நிபுணர், தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் டாக்டர் பர்வேஸ் கிராண்ட் தெரிவித்தார்.
குணமடைந்த நிலையில் சரத் பவார், இன்று வீட்டுக்கு அனுப்பப்பட உள்ளார். அவர் சில நாள்களுக்கு ஓய்வு எடுக்குமாறு மருத்துவக் குழு அவருக்கு அறிவுறுத்தியுள்ளது. அதன்பிறகு அவர் படிப்படியாகத் தனது வழக்கமான பணிகளையும், பொதுப் பணிகளையும் மீண்டும் தொடங்கலாம் என்று மருத்துவர்கள் கூறினார்.
முன்னதாக, கடந்த ஜனவரி 28 அன்று தனது மருமகனும் மகாராஷ்டிர துணை முதல்வருமான அஜீத் பவார் விமான விபத்தில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More Stories
முதுமலை வனப் பகுதியில் வலம் வந்த ‘ரிவால்டோ’ யானை உயிரிழப்பு
அசாமில் அவசர காலத்தில் விமானம் தரையிறங்கும் சாலை: முதலில் லேண்ட் ஆகி திறந்துவைத்த மோடி!
சென்செக்ஸ் 1,000 புள்ளிகளுக்கும் மேல் வீழ்ச்சி: முதலீட்டாளர்களுக்கு ரூ.6.50 லட்சம் கோடி இழப்பு