மதிமுக முதன்மை செயலர் துரை வைகோ எம்.பி முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார். இவர்களின் சந்திப்பு குறித்து திமுக ஆதரவாளர்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்
முக்கிய அம்சங்கள்:
துரை வைகோ -முதலமைச்சர் சந்திப்பு
திமுக ஆதரவாளர்கள் அதிருப்தி
திமுக கூட்டணியில் இடம்பெற்று இருக்கும் மதிமுக கட்சியின் தலைவர் மற்றும் முதன்மை செயலர் ஆகியோரின் தற்போதைய நிலைப்பாடு திமுக ஆதரவாளர்களால் விமர்சனங்களுக்கு உண்டாக்கி வருகின்றது. தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு ஆளும் கட்சிக்கு ஆதரவாக அவர்கள் பேசி வருவதாக ஒரு குற்றசாட்டு திமுக ஆதரவாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. தேர்தலுக்கு முன்பே மதிமுக தலைவர் வைகோ தவெக குறித்து பாசிட்டிவாக தான் பேசி வந்தார்.
அவர்கள் இந்த தேர்தலில் ஆச்சர்யங்களை ஏற்படுத்துவார்கள் என கணித்தார். அவரின் கணிப்பின் படி தவெக தேர்தலில் ஆச்சர்யங்களை மட்டும் ஏற்படுத்தாமல் வெற்றியும் அடைந்தனர். அதனைத்தொடர்ந்து வைகோவும் துரை வைகோவும் தவெகவிற்கு ஆதரவாக பேசி வருவதால் அவர்கள் அக்கட்சியில் இணையலாம், அவர்களுடன் கூட்டணி வைக்கலாம் என்ற ஒரு பேச்சு இருந்து வருகின்றது.
தொண்டர்களின் விருப்பம் : வேறு எந்த ஒரு காரணமும் இல்லை : துரை வைகோ பேச்சு குறித்து வைகோ விளக்கம்
குறிப்பாக துரை வைகோ, தனி சின்னத்தில் தான் இனி போட்டியிட வேண்டும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது தவறு என்பது போல பேசினார் துரை வைகோ. இவரின் இந்த கருத்துக்கள் சர்ச்சையானது.அதற்கு வைகோ, தனி சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பம் தான், வேறு எதுவும் காரணம் அல்ல என்றார்.
இந்நிலையில் தான் துரை வைகோ முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து பேசியிருக்கிறார். அந்த சந்திப்பு குறித்து விவாதிக்கப்பட்டு வரும் நிலையில் சில துரை வைகோ சில கோரிக்கைகளை முன் வைப்பதற்காக தான் முதலமைச்சர் விஜய்யை சந்தித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த சந்திப்பு குறித்து திமுக ஆதரவாளர்கள் கடுமையாக பேசி வருகின்றனர்.
முதல்வர் விஜயின் மெகா வியூகம்.. வாய் அடைத்து போன எதிரிகள் மற்றும் விமர்சகர்கள்!
கோரிக்கை வைப்பதற்கு நேரில் தான் சந்திக்க வேண்டுமா ? சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் திருச்சிக்கு வந்தபோது அப்போதே கோரிக்கை மனுவை வழங்கி இருக்கலாமே ? இல்லையென்றால் கோரிக்கை மனுவை கடிதமாக வழங்கியிருக்கலாமே என கேள்வி கேட்டு வருகின்றனர் சிலர். இவ்வாறு திமுகவை சேர்ந்தவர்களும் அக்கட்சியின் ஆதரவாளர்களும் இந்த சந்திப்பு குறித்து கடுமையாக பேசி வருகின்றனர்.
திமுகவினால் தான் துரை வைகோ எம்.பி பதவி பெற்றார். ஒருவேளை தமிழக வெற்றிக்கழகம் கட்சிக்கு அவர் செல்வதாக இருந்தால் எம்.பி பதவியை ராஜினாமா செய்துவிட்டு செல்வாரா ? எனவும் சிலர் கேள்வி கேட்டு வருவதையும் பார்க்க முடிகின்றது. ஒரு சிலர் துரை வைகோவிற்கு ஆதரவாகவும் பேசி வருகின்றனர். முதலமைச்சருடன் இணைக்கமாக இருந்தால் தான் தன் தொகுதிக்கு நல்லது செய்ய முடியும்.
மக்களுக்கு நல்லது செய்ய முடியும்.முதலமைச்சரை பகைத்துக்கொள்வது சரியாக இருக்காது. துரை வைகோ சரியாக தான் செயல்படுகிறார் என்றும் சிலர் அவருக்கு ஆதரவாக பேசுவதையும் பார்க்க முடிகின்றது. இந்நிலையில் நாளுக்கு நாள் வைகோ மற்றும் துரை வைகோவின் பேச்சுக்களும் செயல்பாடுகளும் திமுக ஆதரவாளர்களை அதிருப்தியில் ஆழ்த்தி வருவதாகவே தெரிகின்றது. இதற்கிடையில் மதிமுக தொடர்ந்து திமுக கூட்டணியில் தான் தொடர்வார்களா ? இல்லை மிக விரைவில் ஆளும் கட்சியான முதலமைச்சர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் கட்சியுடன் கூட்டணி சேருவார்களா? என்ற மிகப்பெரிய கேள்வியும் எதிர்பார்ப்பும் தமிழ்நாடு அரசியல் களத்தில் இருந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது

More Stories
தமிழகத்தில் ஏற்கெனவே இருந்த திட்டங்களை சரியாக செயல்படுத்தினாலே போதும்” – பிரேமலதா
முதல்வர் பேச்சுக்கு செல்வப்பெருந்தகை எதிர்ப்பு
பதிவுக்கு காத்திருக்கும் அண்ணாமலையின் புதிய கட்சி!