முதல்வர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கில் வீடியோ கான்பிரன்ஸ் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
தமிழக முதலமைச்சர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணையில் முதல்வர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா நேரில் ஆஜராகிறார்களா என்ற எதிர்ப்பார்ப்பு கிளம்பியது. இந்த சூழலில் நீதிமன்ற முக்கிய அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது.
விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு

நடிகரும் தற்போதைய முதல்வருமான விஜய்க்கு கடந்த 1999 ஆம் ஆண்டு சங்கீதா என்பவருடன் திருமணம் நடைபெற்றது.இவர்களுக்கு ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா சாஷா என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.இந்த நிலையில்,விஜய்யும் சங்கீதாவும் கடந்த சில ஆண்டுகளாகவே தனித்து வாழ்ந்து வருவதாக கூறப்பட்டது.இந்த நிலையில்கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சங்கீதா தரப்பில் இருந்து செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.அதன்பிறகு தான் இந்த விவகாரம் பொதுவெளியில் வந்தது.
சங்கீதா வைத்த பரபரப்பு குற்றச்சாட்டு

அப்போது அவர் தாக்கல் செய்த மனுவில்,தன்னுடைய கணவர் விஜய்க்கு நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்பட்டது. இதனால் தானும் தன்னுடைய குழந்தைகளும், மனரீதியாகவும் உடன் ரீதியாகவும் துன்புறுத்தலுக்கு ஆளானதாக பரபரப்பு குற்றச் சாட்டை முன் வைத்தார்.மேலும்,தன்னுடைய கணவருக்கு பொதுவெளியில் இருக்கும் நற்பெயர் கலங்கம் ஏற்படாமல் இருக்க இவ்வளவு நாள் அமைதியாக இருந்தேன். இதற்கு மேல் என்னால் முடியவில்லை. தங்களுக்கு விவாகரத்து வழங்க வேண்டும் என்றும்,தனது வாழ்க்கைத் தேவைகளுக்காக உரிய ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
செங்கல்பட்டு குடும்பல நீதிமன்றத்தில் விசாரணை

அதோடு நீலாங்கரையில் உள்ள குடும்ப வீட்டில் தொடர்ந்து வசிக்கும் உரிமையையும் வழங்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தியிருந்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி செங்கல்பட்டு குடும்பல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது விஜய் மற்றும் சங்கீதா தரப்பில் யாரும் ஆஜராகவில்லை.பின்னர் மே 19ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது இந்த வழக்கு மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டு, அடுத்த கட்ட விசாரணை ஜூன் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக விசாரணை

அப்போது முதல்வர் விஜய் மற்றும் சங்கீதா இருவரும் பொதுமக்கள் மத்தியில் அதிக கவனம் பெறும் பிரபலங்கள் என்பதால், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகும்போது பாதுகாப்பு மற்றும் நடைமுறை சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது. எனவே, வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக விசாரணையில் பங்கேற்க அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
முதல்வர் விஜய் விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு

இந்த நிலையில் இன்று விஜய் -சங்கீதா வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுஜாத்தாவீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராக விஜய் தரப்பு விடுத்த கோரிக்கையை நிராகரித்தார்.மேலும் இரு தரப்பும் இமெயில் ஐடியை சமர்ப்பிக்க அறிவுறுத்தியுள்ளார். விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு ஆகஸ்ட் 7க்கு ஒத்திவைத்து

More Stories
“தமிழக வேளாண் பட்ஜெட் திமுக திட்டங்கள் மீது ஒட்டப்பட்ட ‘வெற்றி’ லேபிள்” – மு.க.ஸ்டாலின்
அஞ்சலையம்மாள், நம்மாழ்வார் பெயர்களில் விவசாயிகளுக்கு ரொக்கப் பரிசுடன் விருது
காட்டுப்பன்றிகள் சேதத் தடுப்பு திட்டம்: வேளாண் பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்பு