இராசிபுரம் – வநேத்ரா முத்தாயம்மாள் இன்ஸ்டிடியூசனில் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 32-வது ஆண்டு விழா, பாலிடெக்னிக் இன்ஸ்டிடியூஷனின் 15-வது மற்றும் கல்வியியல் கல்லூரியின் 11-வது ஆண்டு விழாவானது “கலாச்சார விழா-2026” என்ற தலைப்பில் வெகு விமரிசையாக கல்லூரி வளாகத்தில் கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக விஜய் டிவியின் சின்னத்திரை பிரபலங்களான தொலைக்காட்சி அறிவிப்பாளரும், சின்னத்திரை நடிகருமான திரு. கதிர், சின்னத்திரை நடிகை வெண்பா மற்றும் சமூக வலைத்தள பிரபலமும், நடன கலைஞரும் சின்னத்திரை நடிகையுமான ஸ்வேதா சுப்பிரமணியன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று மாணவர்களிடையே நடனமாடியும் சிறப்பாக உரையாடியும் அவர்களை உற்சாகப்படுத்தினர்.
முன்னதாக
விழாவில் கல்லூரியின் தாளாளர் திரு.கே.பி.இராமசுவாமி, அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். இதனைத் தொடர்ந்து கல்லூரியில் 10, 20 மற்றும் 30 ஆண்டுகள் பணியாற்றிய பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, சிறப்பு ஊக்கத்தொகைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் தாளாளருடன் இணைந்து கல்லூரியின் முத்தாயம்மாள் கல்வி அறக்கட்டளையின் அறங்காவலர் திரு. இரா.முத்துவேல், செயலாளர் திருமதி. ச.மஞ்சு, இயக்குநர் – கல்வி முனைவர்.இரா.செல்வகுமரன், கலைக் கல்லூரியின் முதல்வர் முனைவர் எஸ்.பி.விஜயகுமார் மற்றும் துணைமுதல்வர் முனைவர் ஆ.ஸ்டல்லா பேபி, பாலிடெக்னிக் இன்ஸ்டிடியூசனின் முதல்வர் முனைவர். இரா.மணி மற்றும் கல்வியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் ம.மருதை ஆகியோரும் இணைந்து சிறப்பு பரிசுகளையும் வழங்கினர்.
விழாவின் தொடக்கமாக கல்லூரி முதல்வர்கள் மூவரும் ஆண்டறிக்கைகளை வாசித்தனர்.
இதனைத் தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில் கல்லூரி இசைக் குழுவின் இன்னிசை நிகழ்ச்சி, குழு நடனங்கள், பேஷன் ஷோ ஆகியவை இடம் பெற்றிருந்தன.
விழாவில் ஏராளமான மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளை கண்டுகளித்து விழாவைச் சிறப்பித்தனர்.

More Stories
இராசிபுரம் அருகே வியாபாரிகளிடமிருந்து ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட 6,84,980 ரூபாய் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் .
தமிழ்நாடு, புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான திமுக வேட்பாளர் நேர்காணல் தொடங்கியது
நெல்லை அருகே எரிந்த நிலையில் இருந்த காரில் 4 சடலங்கள் மீட்பு: போலீஸார் தீவிர விசாரணை!