நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் பாதுகாப்பு தீவிரமாக்கப்பட்டு உள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தமிழகத்தில் ஏப்ரல் 23 ஆம் தேதி மொத்தம் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இதில் தமிழக சட்டமன்ற வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு 85.15 சதவீத வாக்குகள் பதிவானது. குறிப்பாக இந்த முறை இளம்தலைமுறையினர் அதிக அளவில் வாக்கு செலுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் வாக்கு பதிவு அதிகரிப்பதற்கு காரணம் விஜய்யின் அரசியல் வருகை காரணம் என்று ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.
தமிழக சட்டமன்ற தேர்தல் 2026
இதற்கிடையே தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புகள் வெளியாகி தமிழகத்தில் யார் ஆட்சி பிடிப்பார் என்ற எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. கருத்துகணிப்பின் படி திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், திமுக வட்டாரத்தில் மிகுந்த உற்சாகம் காணப்படுகிறது. ஆனால் மறுத்தரப்பினர், கருத்துகணிப்புக்கு மறுப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி , உள்ளிட்ட 5 மாநிலச் சட்டமன்ற தேர்தலுகான வாக்குபதிவு மே- 4 ஆம் தேதி நடைபெற உள்ளது.
Bee Keepers of India Selling Pure Honey online to Indian consumers via Ecommerce WebsiteScrolling Bee India
மக்கள் அளித்த தீர்ப்பு…எதார்த்தம் இது தான்? | EXCLUSIVE |
வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி காலை 8 மணிக்கு தபால் வாக்குகளுடன் தொடங்கும். அதன் பின்னர் மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். முதல் சுற்று முடிவுகள் காலை 9 மணிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பணிக்காக தமிழகம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு முன்கூட்டியே சிறப்பு பயிற்சிகளும் அளிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையங்களிலும் தேவையான மேஜைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், சிசிடிவி கண்காணிப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் தயார் நிலையில் உள்ளன.
வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகள்
நாளை மறுநாள் நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு தமிழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகுந்த தீவிரத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேர்தல் என்பது ஜனநாயகத்தின் முக்கிய அங்கமாக இருப்பதால், அதன் ஒவ்வொரு கட்டமும் சீராகவும், அமைதியாகவும் நடைபெற வேண்டும் என்பதில் அரசு மற்றும் காவல்துறை அதிக கவனம் செலுத்தி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது வாக்கு எண்ணிக்கை நாளில் எந்தவித சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளும் உருவாகாமல் தடுக்க முன்கூட்டியே எடுக்கப்பட்ட முக்கிய நடவடிக்கையாகும்.
சென்னை காவல்துறை பாதுகாப்பு 20000 போலீஸ்
குறிப்பாக தலைநகர் சென்னை பகுதியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அங்கு மட்டும் சுமார் 20,000 காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்கள், அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகள், மற்றும் முக்கிய சாலைகள் அனைத்தும் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம்கள் பல அடுக்குகள் கொண்ட பாதுகாப்பு வளையத்தில் உள்ளன. அங்கு அனுமதி பெற்ற அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மட்டுமே செல்லும் வகையில் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க காவல்துறையினர் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ரோந்து வாகனங்கள் தொடர்ந்து சுற்றுப்பார்வை மேற்கொண்டு வருகின்றன. அவசர நிலை ஏற்படின் உடனடி நடவடிக்கை எடுக்க விரைவு நடவடிக்கை படையினரும் தயாராக உள்ளனர். பொதுமக்கள் இடையே தவறான தகவல்கள் பரவாமல் இருக்கவும் கண்காணிப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது.

More Stories
சேலம் வழியே மே மாத சிறப்பு ரயில்கள்… ஈரோடு, போடனூர் டூ சென்னை- தெற்கு ரயில்வே அறிவிப்பு!
தமிழர் உயர்வுக்கு வழிகாட்டியவர் பாரதிதாசன்: 136-வது பிறந்தநாளில் முதல்வர், தலைவர்கள் புகழாரம்
ஆதார், பான் எண்ணைத் திருடி நூதன மோசடி: ரூ.4.70 கோடி ஜிஎஸ்டி செலுத்துமாறு ஓட்டுநருக்கு நோட்டீஸ்