சென்னை அரக்கோணம் மின்சார ரயில் சேவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சென்னை அரக்கோணம் இடையே புறநகர் மின்சார ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் பாதையில் நாள் ஒன்றுக்கு ஆயிரத்திற்கும் அதிகமான பயணிகள் தினசரி சேவையை பயன்படுத்தி வருகின்றனர் அந்த வகையில், பயணம் செய்து வரும் பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியேற்றுள்ளது அது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
சென்னை அரக்கோணம் மின்சார ரயில் சேவை

அரக்கோணம் ரயில் நிலையத்தில் திட்டமிடப்பட்ட ரயில் தண்டவாள பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளதால் ஏப்ரல் 16ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை சில ரயில் சேவைகளில் தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து ரயில்வே கோட்டம் கூறியிருப்பதாவது தண்டவாள அமைப்பு மேம்பாடு தொழில்நுட்ப வசதிகள் புதுப்பிப்பு மற்றும் பாதுகாப்பு தரத்தை உயர்த்தும் நோக்கில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
மின்சார ரயில் சேவை வழித்தடம் மாற்றம்

இதன் காரணமாக குறிப்பிட்ட நேரங்களில் இயக்கப்படும் சில மின்சார ரயில் இறுதி நிலையம் மாற்றப்பட்டு பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி ,அரக்கோணம் வரை பயணம் செய்ய திட்டமிட்டுள்ள பயணிகள் திருவலங்காடு ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து மாற்று போக்குவரத்துக்கு வசதிகளை பயன்படுத்த வேண்டி இருக்கும்.
திருத்தணி செல்லும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

அதே போல் திருத்தணியில் இருந்து நண்பர்கள் 12.35 மணிக்கு சென்னை சென்ட்ரல் நோக்கி இயக்கப்படும் மின்சார அலையிலும் தனது சேவையை திருவலாம் காடு ரயில் நிலையத்திலிருந்து தொடங்கும் எனும் தெரிவித்துள்ளது. இதனால் திருத்தணி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் பயணிகள் முன்கூட்டியே தங்களது பயணத்திட்டத்தை சரி பார்த்துக் கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
ரயில்வே நிர்வாகம் வேண்டுக்கோள்

மேலும் பயணிகள் தாமதம் மற்றும் சிரமங்களை தவிர்க்க தேவையான மாற்று ஏற்பாடுகளை முன்னதாகவே மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுவது பராமரிப்பு பணிகள் முடிவடைந்த பிறகு அனைத்து ரயில் சேவைகளும் வழக்கம்போல் நேர அட்டவணையின் படி மீண்டும் இயங்கும் என்றும் ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளன இதனால் தற்காலிகமாக மட்டுமே இந்த மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்த திட்டத்திற்கு பயணிகள் ஒத்துழைப்பு வழங்குமாறு ரயில்வே நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது

More Stories
தமிழகத்திற்கு இன்று பிரதமர் மோடி வருகை – நாகர்கோவிலில் ரோட் ஷோ- உற்சாகத்தில் பாஜக!
சத்தீஸ்கரில் பாய்லர் வெடித்து 10 பேர் உயிரிழப்பு: 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம்
மேற்கு வங்கத்தில் மீன் உற்பத்தியில் அலட்சியம்: மம்தா அரசு மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு