புதுடெல்லி: ராமர் கோயில் நன்கொடை கையாடல் புகார் குறித்து, உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி வழக்கறிஞர்கள் அஜய் குமார் ராய், தினேஷ் குமார் ராய் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
ஆர்ஜேடி எம்பி சுதாகர் சிங், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி மனு தாக்கல் செய்துள்ளார். வழக்கறிஞர் நரேந்திர குமார் கோசுவாமி, மதுரையைச் சேர்ந்த ஹிந்து தர்ம பரிஷத்தின் கே.கே. ரமேஷ் சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த 4 மனுக்களும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தன. அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு தொடர்பாக உத்தர பிரதேச அரசு அமைத்துள்ள சிறப்பு விசாரணைக் குழு அதன் நிலை அறிக்கையை சீலிட்ட உறையில் தாக்கல் செய்ய வேண்டும்.
மேலும் மனுக்கள் தொடர்பாக அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை பதில் அளிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

More Stories
ரயில்வே ஏசி பெட்டிகளில் நூதன திருட்டு: 4 ஆண்டுகளில் 1.27 கோடி பெட் சீட், துண்டுகள் மாயம்
சோனம் வாங்சுக் உடல்நிலை கவலைக்கிடம்: 17 நாள் உண்ணாவிரதத்தை கைவிட வலுக்கும் கோரிக்கை
ஹார்முஸ் ஜலசந்தி தாக்குதலில் இந்திய மாலுமி உயிரிழப்பு – ஈரான் தூதருக்கு சம்மன்