July 17, 2026

ரூ.1.27 லட்சம் கோடியில் செமிகண்டக்டர் உற்பத்தி திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: இந்​தி​யா​வின் செமிகண்​டக்​டர் வடிவ​மைப்​பு, உற்பத்தியை மேம்​படுத்​து​வதற்​காக, ரூ.1,27,500 கோடி மதிப்​பில் ‘செமி​கான் 2.0’ திட்​டத்​துக்கு பிரதமர் மோடி தலை​மையி​லான மத்திய அமைச்​சரவை நேற்று ஒப்​புதல் அளித்​துள்​ளது.

இந்​தி​யா​வில் செமிகண்​டக்​டர் உற்​பத்​திக்கு தொடர்ச்​சி​யான, நீண்ட​கால தேவை இருப்பதை கருத்​தில் கொண்டு ‘செமி​கான் 1.0’ திட்​டம் கொண்​டு​வரப்​பட்​டது. இதன் உற்​பத்​தித் திறனை தக்க வைத்து கொள்​வதற்​கும், உலகள​வில் செமிகண்​டக்​டர் உற்பத்தியில் இந்​தி​யாவை முன்​னணி நாடாக உரு​வெடுக்​கச் செய்​வதற்​கும் ரூ.1,27,500 கோடி மதிப்​பில் செமி​கான் 2.0 திட்டத்துக்கு மத்​திய அமைச்​சரவை நேற்று ஒப்​புதல் அளித்​தது.

‘செமி​கான் 2.0’ திட்​டம், சிப் வடிவ​மைப்​பில் ஏற்​கெனவே கிடைத்துள்ள வெற்​றியை விரிவுபடுத்த உதவும். சிப் வடிவ​மைப்​பில் ஏற்கெனவே 105 ஸ்டார்ட் அப் நிறு​வனங்​கள் ஈடு​பட்​டுள்ள நிலையில், வடிவ​மைப்பு மற்​றும் உற்​பத்​தியை மேம்​படுத்​து​தில் இத்​திட்​டம் கவனம் செலுத்​தும்.

செமிகண்​டக்​டர் உற்​பத்​திக்​கான எந்​திரங்​கள், மூலப்​பொருட்​கள், ரசாயனங்​கள், வாயுக்​களின் உற்​பத்தி & ஆராய்ச்சி மேம்​பாட்​டில் ஈடு​படும் நிறு​வனங்​களுக்கு ஊக்​கத்​தொகை வழங்​கப்​படும். இது செமிகண்​டக்​டர் துறை​யின் நிலை​யான வளர்ச்​சிக்கு அடித்தளமாக அமை​யும்.

முதலா​வது உற்​பத்தி ஆலை 2028-ல் செயல்​பாட்​டுக்கு வரவுள்ள நிலை​யில், இந்​தி​யா​வின் செமிகண்​டக்​டர் உற்​பத்​திக்​கான நடவடிக்​கை​களின் மீது உலகம் அதிக நம்​பிக்கை கொண்​டுள்​ளது. சிப் உற்​பத்​திக்​கான ஆலைகளை அமைக்க அதிக உற்பத்தியாளர்களை ஈர்க்​கும் முயற்​சிகள் இத்​திட்​டத்​தின் கீழ் மேற்​கொள்​ளப்​படும். இதில் சிலிக்​கான் ஆலைகள், கூட்டு செமிகண்​டக்​டர் ஆலைகள், தனித்​துவ பாகங்​கள் தயாரிக்​கும் ஆலைகள், காட்​சித்​திரை உற்​பத்தி ஆலைகள் போன்​றவை அமைக்​கப்​படும்.

செல்​போன் உற்​பத்தி திட்​டம்: செல்​போன் உற்​பத்​திக்கு அளிக்கப்பட்ட ஊக்​கத்​தைத் தொடர்ந்​து, இந்​தியா உலகின் இரண்டாவது மிகப்​பெரிய மொபைல் உற்​பத்​தி​யாள​ராக உருவெடுத்​துள்​ளது. நாட்​டின் செல்​போன் உற்​பத்தி 2024- 25 நிதியாண்​டில் ரூ. 5.5 லட்​சம் கோடி​யாக அதி​கரித்​துள்​ளது. செல்போன் ஏற்​றுமதி 2024-25 நிதி​யாண்​டில் ரூ. 2 லட்​சம் கோடியாக அதி​கரித்​துள்​ளது.

இந்​நிலை​யில் உற்​பத்​தி​யுடன் கூடிய ஊக்​கு​விப்பு திட்​டத்​தின் கீழ் ரூ.62,500 கோடி மதிப்​பில் இந்​திய பிராண்ட் செல்​போன் தயாரிப்பு திட்​டத்​துக்கு (எம்​பிஎம்​எஸ்) மத்​திய அமைச்​சரவை நேற்று ஒப்புதல் அளித்​துள்​ள​தாக மத்​திய தகவல் தொழில்​நுட்​பத்​துறை அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் தெரி​வித்​தார்.

இது குறித்து மத்​திய அரசு வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறியிருப்பதாவது: இத்​திட்​டம் இந்​திய பிராண்ட் செல்​போன் உற்பத்​தியை அதி​கரிக்​க​வும், புதிய முதலீடு​களை ஈர்க்​க​வும், ஏற்றும​தியை அதி​கரிக்​க​வும் மற்​றும் இத்​துறை​யில் வேலை​வாய்ப்பு​களை அதி​கள​வில் உரு​வாக்​க​வும் கொண்டு வரப்பட்டுள்ளது. இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது. இது தவிர யூரியாவை உள்​நாட்​டில் தயாரிப்​ப​தற்​கான தேசிய முதலீட்டுக்கொள்​கை, உட்பட மொத்​தம்​7​முக்​கிய ​திட்​டங்​களுக்​கு மத்​திய அமைச்​சரவை நேற்​று ஒப்​புதல்​ அளித்​தது.

Spread the love