November 9, 2026

ரூ.30 கோடி குதிரை பேரம்: பி.எம்.மன்னன் கைது – எம்எல்ஏ உதவியாளரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை!

மதுரை: தவெக ஆட்சிக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களிக்க ரூ.15 கோடி முதல் ரூ.30 கோடி வரை பேரம் பேசியதாக, அதிமுக முன்னாள் துணை மேயர் பி.எம்.மன்னன் மீது மதுரை மத்திய தொகுதி தவெக எம்எல்ஏ முஸ்தபா புகார் அளித்தார்.

இதையடுத்து, மன்னனிடம் 4 மணி நேரம் விசாரணை நடத்திய மத்திய குற்றப்பிரிவு போலீசார், நவம்பர் 6ஆம் தேதி அவரைக் கைது செய்தனர். தொடர்ந்து, எம்எல்ஏவின் உதவியாளர் கனி ராஜாவிடம் தொலைபேசி உரையாடல்கள், அழைப்பு விவரங்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரை: தவெக ஆட்சிக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களிக்க ரூ.15 கோடி முதல் ரூ.30 கோடி வரை பேரம் பேசியதாக, அதிமுக முன்னாள் துணை மேயர் பி.எம்.மன்னன் மீது மதுரை மத்திய தொகுதி தவெக எம்எல்ஏ முஸ்தபா புகார் அளித்தார்.

இதையடுத்து, மன்னனிடம் 4 மணி நேரம் விசாரணை நடத்திய மத்திய குற்றப்பிரிவு போலீசார், நவம்பர் 6ஆம் தேதி அவரைக் கைது செய்தனர். தொடர்ந்து, எம்எல்ஏவின் உதவியாளர் கனி ராஜாவிடம் தொலைபேசி உரையாடல்கள், அழைப்பு விவரங்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Spread the love