February 9, 2026

“லண்டனை விட சிறப்பு… டெல்லி மெட்ரோவில் டிக்கெட் விலை குறைவு” – பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணி பாராட்டு

“லண்டனை விட சிறப்பு... டெல்லி மெட்ரோவில் டிக்கெட் விலை குறைவு” - பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணி பாராட்டு

புதுடெல்லி: பிரிட்​டனைச் சேர்ந்​தவர் ரோரி போர்ட்​டர். இவர் இந்தி​யா​வுக்கு சுற்​றுலா வந்த பிறகு டெல்லி மெட்ரோ ரயி​லின் தரத்​தைப் பாராட்டி வீடியோவை சமூக வலை​தளத்​தில் பகிர்ந்துள்ளார்.

அதில் ரோரி கூறியிருப்பதாவது: “டெல்லி மெட்ரோ ரயி​லில் அரை மணி நேரப் பயணத்​துக்கு ரூ.43 மட்​டுமே (பிரிட்​டன் பணத்​தில் 0.35 பவுண்ட் மட்​டுமே) கட்​ட​ண​மாக உள்​ளது. லண்​டன் மெட்​ரோவுடன் ஒப்​பிடும்​போது இது மிக மிக குறை​வான கட்​ட​ணம். உலகிலேயே நான் பார்த்த மெட்ரோ ரயில்​களில் மிகக் குறை​வான கட்​ட​ணம் டெல்​லி​யில் ​தான் உள்​ளது.

மேலும், மெட்ரோ ரயில்​களின் தரம், பாது​காப்பு அரு​மை​யாக உள்ளது. அனைத்து ரயில்​களும் மிக​வும் அழகாக​வும், சுத்தமாகவும் பராமரிக்​கப்​படு​கின்​றன. இதைப் பார்த்து நான் ஆச்சரி​யம் அடைந்​தேன். உலகம் முழு​வதும் நான் பார்த்த மெட்ரோ ரயில்​களில் இது​தான் மிகச் சிறப்​பாக இருக்​கிறது என்று சொல்​வேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதைப் பார்த்த சிலர் ரோரி போர்ட்​டரின் வீடியோவுக்கு பாராட்டு தெரி​வித்​துள்​ளனர். இது குறித்து ஒரு பதிவர் கூறும்​போது, “நமது மெட்ரோ ரயில் திட்​டம், உலக அளவில் பிரபலம் பெற்று வரு​கிறது. நவீன வசதி​கள், சுத்​த​மான ரயில் நிலை​யங்​கள், வசதி​கள் போன்றவை சர்​வ​தேச சுற்​றுலாப் பயணி​களின் கவனம் ஈர்த்து வரு​கிறது. உங்​கள் நண்​பர்​களை​யும், குடும்​பத்​தா​ரை​யும் இந்தியா​வில் சுற்​றுலாப்​ பயணம்​ செல்​வதற்​கு ஊக்​கு​வி​யுங்​கள்” என்​று தெரிவித்துள்ளார்.

Spread the love