இன்று காலை தன் ஜனநாயக கடமையை நிறைவேற்றிவிட்டு கிளம்பியபோது மாற்றம் தேவையில்லை என செய்தியாளர்களிடம் தெரிவித்தார் அஜித் குமார் என தகவல் பரவியது. இந்நிலையில் அதில் உண்மை இல்லை என்கிறார் சுரேஷ் சந்திரா.
முக்கிய அம்சங்கள்:
- அஜித் பற்றி பரவிய தகவல்
- அஜித் மேனேஜர் விளக்கம்
- முதல் ஓட்டு அஜித் ஓட்டு
வாக்களித்த அஜித் : திருவான்மியூரில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு காலை 6.45 மணிக்கு வந்த அஜித் குமார் 6.54 மணிக்கு வாக்களித்தார். தமிழகத்தில் பதிவான முதல் வாக்கு அஜித் குமாரின் வாக்கு என்று செய்திகள் வெளியாகியிருக்கிறது. எப்பொழுதுமே திருவான்மியூர் வாக்குச்சாவடியில் முதல் ஆளாக வாக்களிக்கும் அஜித் குமார் இன்று தமிழகத்தின் முதல் வாக்கை பதிவு செய்தவராகியிருக்கிறார்.
அவர் வாக்களித்துவிட்டு வெளியே வந்தபோது அங்கு இருந்த செய்தியாளர்கள் அஜித்திடம் பேட்டி எடுக்க முயற்சி செய்தார்கள். ஆனால் அவர் யாரிடமும் எதுவும் பேசாமல் தன் ரசிகர்களை பார்த்து ஹார்டின் விட்டுவிட்டு செல்போனில் வீடியோ எடுத்துவிட்டு சென்றார். இந்நிலையில் தமிழகத்தில் மாற்றம் வருமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு No Need அதாவது தேவையில்லை என்று அஜித் குமார் கூறியதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது.
குறிப்பிட்ட ஊடகம் ஒன்றின் லோகோவுடன் அந்த தகவல் ஷேர் செய்யப்படுவதால் அஜித் தான் அப்படி சொல்லிவிட்டாரோ என்று மக்கள் நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள். இந்நிலையில் No Need என்று அஜித் குமார் கூறவே இல்லை என அவரின் மேனேஜர் சுரேஷ் சந்திரா விளக்கம் அளித்திருக்கிறார். மேலும் பொய்யான தகவலை பரப்ப வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
பொய் விபரம்: பிரபல ஊடகங்களின் லோகோவை வைத்து பொய்யான தகவல்களை பரப்புவது தற்போது அதிகரித்து வருகிறது. நேற்று கூட அப்படியொரு பொய் தகவல் எக்ஸ்போஸ் ஆனது. இப்படியொரு செய்தியை அட்டைப்படத்தில் நாங்கள் வெளியிடவில்லை என்று குறிப்பிட்ட பிரபலத்தை டேக் செய்து சம்பந்தப்பட்ட ஊடகம் ட்வீட் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் அஜித்தை வைத்து பொய்யான தகவல் பரவியிருக்கிறது.
வாக்களிப்பதற்காகவே வெளிநாட்டில் இருந்து வந்தார் அஜித். கார் பந்தயங்களில் கலந்து கொண்டு வருவதால் வெளிநாடுகளில் இருக்கிறார். எங்கு இருந்தாலும் வாக்களிக்கும் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று நேற்று சென்னை திரும்பினார். இன்று வெள்ளை நிற கோட் சூட்டில் வந்து வாக்களித்தார். மேலும் அவர் தன் செல்போனில் வீடியோ எடுத்தபடியே வந்தது தான் அனைவரையும் வியக்க வைத்திருக்கிறது. தல போன் எல்லாம் பயன்படுத்துகிறாரே என்பதே அந்த வியப்பிற்கு காரணம்.
அஜித் கோட் சூட் அணிவது ஒன்றும் முதல் முறை அல்ல. அதனால் அவரை இன்று காலை கோட் சூட்டில் பார்த்தபோது ஆச்சரியம் இல்லை. மாறாக அஜித்தை பார்த்த சந்தோஷம் தான் அங்கிருந்த ரசிகர்களுக்கு அதிகம் இருந்தது. ஏ.கே., ஏ.கே. என்று அவர்கள் மகிழ்ச்சி கரகோஷம் எழுப்பினார்கள்.
அஜித் பட இயக்குநர்கள்: பெல்ஜியத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் அஜித் குமார் ரேஸிங் அணி கலந்து கொண்டது. அந்த ரேஸில் தன் அணி இரண்டாவது இடத்தை பிடித்தபோது கிடைத்த வெற்றிக் கோப்பை முத்தமிட்டு ஆனந்த கண்ணீர்விட்டார் அஜித் குமார். அவரின் அந்த புகைப்படம் வைரலானது.

More Stories
தமிழ்நாட்டில் விறுவிறுப்பாக நடக்கும் வாக்குபதிவு.. வாக்களர்களை வரவேற்கும் ரோபோ TINA – அசத்தல்!
சொந்த ஊருக்கு போக பேருந்து இல்லை.. பூவிருந்தவல்லி–காஞ்சிபுரத்தில் வாக்காளர்கள் சாலைமறியல்!
கடந்த இரண்டு மணி நேரத்தில் அதிகபட்சமான வாக்குப்பதிவு நடந்த மாவட்டங்கள்