July 17, 2026

விஜய்யின் ஆட்சியை கவிழ்க்க மேலும் ஒரு எம்.எல்.ஏ.வை இழுக்க முயற்சி? – கைதான நபர் வாக்குமூலம்

சென்னை: விஜய்​யின் ஆட்​சி​யை கவிழ்க்க மேலும் ஒரு எம்​எல்​ஏவை இழுக்க முயற்சி நடை​பெற்​ற​தாக பரபரப்பு தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன.

கிருஷ்ணகிரி மாவட்​டம் ஊத்​தங்​கரை தொகுதி தவெக எம்​எல்ஏ இளை​ய​ராஜா​விடம், கட்​சியி​லிருந்து விலகி ஆட்​சி​யைக் கவிழ்க்க ஒத்​துழைக்க ரூ.35 கோடி வரை பேரம் பேசப்​பட்​ட​தாக அவர் அளித்த புகாரின் பேரில், சென்னை திரு​வல்​லிக்​கேணி போலீ​ஸார் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

இந்த வழக்​கில் முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி​யின் ஆதர​வாளர்​கள் உட்பட 11 பேர் ஏற்​கெனவே கைது செய்​யப்​பட்​டிருந்த நிலை​யில், மதுரை மாவட்​டம் உசிலம்​பட்​டியைச் சேர்ந்த கணேசன் (41) 12-வது நபராக கைது செய்​யப்​பட்​டார்.

விசா​ரணை​யில், பேர​வைத் தலை​வர் தொடர்​பான தீர்​மானத்​தின்​போது, உசிலம்​பட்டி தொகு​தி​யைச் சேர்ந்த தவெக எம்​எல்​ஏவை எதி​ராக வாக்​களிக்க வைக்க, அவருக்கு நெருக்​க​மான நபர் மூலம் பேரம் பேச முயற்சி நடை​பெற்​ற​தாக கணேசன் வாக்​குமூலம் அளித்​த​தாக போலீ​ஸார் தெரி​வித்​தனர்.

இதையடுத்து அவர் நீதி​மன்​றக் காவலில் அடைக்​கப்​பட்​டார். இதற்​கிடையே, முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி மற்​றும் அவரது சகோ​தரர் அசோக் குமாருக்கு சென்னை உயர் நீதி​மன்​றம் நிபந்​தனை முன்​ஜாமீன் வழங்​கி​யுள்ள நிலை​யில், செந்​தில் பாலாஜி திரு​வல்​லிக்​கேணி காவல் துணை ஆணை​யருக்கு கடிதம் ஒன்றை அனுப்​பி​யிருந்​தார்.

அதில், தவெக எம்​எல்​ஏ​விடம் பேரம் பேசி​ய​தாக பதி​யப்​பட்ட வழக்​கில் என் பெயரும், சகோ​தரர் பெயரும் இல்​லை. அப்​படி இருக்​கை​யில் எங்​களுக்கு சம்​மன் அனுப்​பப்​பட்​டது ஏன்? இதற்கு விளக்​கம் அளிக்க வேண்​டும் என குறிப்​பிடப்​பட்​டிருந்​த​தாக தெரிவிக்​கப்​பட்​டது. இதற்கு பதில் அளிப்​பது குறித்து போலீ​ஸார் ஆலோ​சித்து வரு​கின்​றனர்​.

Spread the love