April 4, 2026

விஜய் கார் மீது ஏறிய தொண்டர்கள்.. பரப்புரைக்கு செல்லும் வழியில் அதிர்ச்சி-சர்ச்சை கிளப்பிய வீடியோ!

புதுச்சேரிக்கு பரப்புரை செல்லும் வழியில் விஜய் கார் மீது தவெக தொண்டர்கள் அத்துமீறி ஏறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 9-ம் தேதி 30 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி கூட்டணிக்கு தமிழக வெற்றிக்கழகம் அழைப்பு விடுத்திருந்தது மேலும் சில கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் கூட்டணி அமைக்க எந்த ஒரு கட்சியும் முன் வராததால், தமிழக வெற்றிக்கழகம் முதன்முறையாக புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் தனித்து களமிறங்க உள்ளது. சமீபத்தில் 30 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அக்கட்சி தலைவர் விஜய் அறிவித்தார்.அதன்படி,

தவெக புதுச்சேரி வேட்பாளர்கள்

  • லாஸ்பேட்டை -சாமிநாதன்
  • காரைக்கால் தெற்கு அசனா
  • நெட்டப்பாக்கம் (தனி) -பெரியசாமி
  • திருபுவனை (தனி) – சாய் சரவணன் குமார்
  • முத்தியால்பேட்டை – பிரகாஷ் குமார்
  • பாகூர் – தனவேலு
  • ராஜ் பவன் – சந்திரன்
  • உப்பளம் – சிவா
  • உழவர்கரை – சசிபாலன்
  • அரியாங்குப்பம் – குமரவேலு
  • அரியாங்குப்பம் – குமரவேலு
  • மணவெளி -ராமு
  • வில்லியனூர் – ரமேஷ்
  • முதலியார்பேட்டை – மணிபாலன்
  • மண்ணாடிப்பட்டு – பாரதிதாசன்
  • உருளையன்பேட்டை – மரிய பிரான்சிஸ்
  • மங்கலம் – சத்யா
  • காமராஜ் நகர் – சுமன்
  • நெல்லித்தோப்பு விக்னேஸ்வரன்
  • காலாப்பட்டு – சசிக்குமார்
  • இந்திரா நகர் – முருகன்
  • கதிர்காமம் – ஜெயந்தி
  • ஊசுடு (தனி) -சரவணபவா
  • தட்டாஞ்சாவடி – பன்னீர்செல்வம்
  • ஏம்பலம் (தனி) – தமிழ்ச்செல்வன்
  • நெடுங்காடு (தனி) – காமராஜ்
  • திருநள்ளாறு – ராஜா முஹம்மது உள்ளிட்டோர் போட்டியிட உள்ளனர்.

திமுக கூட்டணியில் என்ன நடக்கிறது? ஏன் இப்படி பேசுகிறார்கள்?

தவெக தலைவர் விஜய் இன்று பரப்புரை

இந்த நிலையில்,தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்க்கொள்ள புதுச்சேரி காவல்துறையினர் 11 நிபந் தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. மேலும் தவெக சார்ப்பில் 23 இடங்களில் பரப்புரை நடத்த அனுமதி கேட்டிருந் த நிலையில் 4 இடங்களில் மட்டும் விஜய் பரப்புரை நடத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.இதனைத் தொடர்ந்து, பரப்புரைக்காக சென்னையில் இருந்து கார் மூலம் புதுச்சேரி புறப்பட்டார். அப்போது,ஈ.சி.ஆர். சாலையில் புதுச்சேரி நோக்கி செல்லும் தவெக தலைவர் விஜய்யின் வாகனத்தை மறித்து கார் மீது அக்கட்சி தொண்டர்கள் ஏறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது விஜய்யோடு வந்த பவுன்சர்கள் அவர்களை கார் மீதிருந்து கீழிறக்கி அப்புறப்படுத்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டனர்.

  

விஜய் கார் மீது தவெக தொண்டர்கள்

தொடர்ந்து தவெக தலைவர் விஜய் பொதுக்கூட்டங்களுக்கும், பரப்புரைகளுக்கும் செல்லும் போது அவரது வாகனத்தை பின் தொடர்வது, வாகனத்தின் மீது ஏறி கூச்சலிடுவது, மரத்தின் மீது ஏறுவது, காவல்துறையின் கையை கடித்த சம்பவங்களில் ஈடுப்படுவது பார்பவர்களை முகசுழிப்பை ஏற்படுத்தி வருகிறது.மேலும் தவெகவில் விஜய் பேச்சை அவரது தொண்டர்கள் மதிப்பதில்லை என்ற விமர்சனமும் எழுந்து வருகிறது.அண்மைகாலமாக இதுபோன்ற சம்பவங்களால், விபத்துகளும் நடந்து வருகிறது.

தவெக தலைவர் விஜய் பார்க்க வேண்டும் உற்சாகம் கட்டுப்பாட்டை மீறி, கார் மீது ஏறுவது போன்ற செயல்களில் மாறுவது மிகவும் தவறானது. இது பாதுகாப்பு கோணத்தில் ஆபத்தானதோடு தலைவரின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்குகிறது.அரசியல் நிகழ்வுகளில் ஒழுங்கு மிகவும் முக்கியம். குறிப்பாக பொதுமக்கள் ரசிகர்கள் அதிகமாக கூடும் இடங்களில் இத்தகைய அட்ராசிட்டி சம்பவங்கள் நடந்தால் அது கட்சியின் ஒழுங்கை பாதிப்பதோடு பொதுமக்களின் பார்வையிலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

Spread the love