பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளிலும் வேட்புமனுவை தாக்கல் செய்த விஜய் முன்னுக்கு பின் முரணான தகவல்களை கொடுத்துள்ளதால் அவரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.

தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்கான தேர்தல் பணிகள் தீவிரம் எடுத்து வருகின்றன. அந்த வகையில் மாநிலம் முழுக்க கடந்த 30ஆம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் செய்யும் நடைமுறை தொடங்கியது. வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நாள் அன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட கட்சியின் தலைவர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தனர்.
விஜயின் வேட்பு மனுவில் குளறுபடி
இந்த சூழலில்தான் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக அறிவித்திருந்தார்.
A high-end hearing aid… for less than $150Hearing Magazineஅந்த வகையில் கடந்த மார்ச் 30 -ஆம் தேதி பெரம்பூர் தொகுதியில் வேட்பு மனுவை தாக்கல் செய்து அன்றைய தினம் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். டி நகர், கொளத்தூர், வில்லிவாக்கம் , பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என சொல்லப்பட்டு வந்த சூழலில் பாதுகாப்பு நடைமுறைகள் காரணமாக இரண்டு இடங்களில் பிரச்சாரம் ஒத்திவைக்கப்பட்டது. முதல்வரின் சொந்த தொகுதியான கொளத்தூரில் பிரச்சாரம் மேற்கொண்ட விஜய் சில நிமிடங்கள் மட்டுமே அங்கு பேசினார்.
வேட்பு மனுக்களில் குளறுபடி
இந்த சூழலில்தான் விஜய் தாக்கல் செய்த வேட்பு மனுக்களில் குளறுபடிகள் இருப்பதால் பெரம்பூர் வேட்பு மனு நிராகரிக்கப்படும் என்ற பேச்சுக்கள் எழுத்தொடங்கி இருக்கின்றன. விஜய் தாக்கல் செய்த வேட்பு மனுவில் தன்மீது எந்தவித குற்ற வழக்கும் இல்லை என அவரது குறிப்பிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து அவர் போட்டியிட உள்ள மற்றொரு தொகுதியான திருச்சி கிழக்கு தொகுதியில் நேற்று முன்தினம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அதில் கடந்த 2025 -ஆம் ஆண்டு மதுரையில் நடந்த தவெக மாநாட்டின்போது தன் பாதுகாவலர்கள் தாக்கப்ட்டாக கூறப்படும் புகாரில் கூடக்கோவில் போலீஸ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக விஜய் குறிப்பிட்டு இருக்கிறார்.
பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்த வேட்பு மனுவில் எந்த குற்ற வழக்குகளும் தன மீது இல்லை என குறிப்பிட்டு விட்டு திருச்சியில் தாக்கல் செய்த வேட்புமனுவில் குற்ற வழக்குகள் இருப்பதாக குறிப்பிட்டது முன்னுக்கு பின் முரணாக இருப்பதாக கருதப்படுகிறது. ஆனால் கூடக்கோ விவகாரத்தில் போலீஸ் வழக்கு பதிவு செய்த பின்னர் அவர்களிடமிருந்து எந்தவித சம்மனோ,தகவலோ வரவில்லை என்பதால் இதுகுறித்து வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது.
மேலும் போட்டியிடும் வேட்பாளர் வேட்பு மனுவில் உள்ள தவறுகளை சரிசெய்ய ஒரு தொகுதியில் நான்கு மனுக்களை தாக்கல் செய்யக்கூடிய விதிகள் இருக்கின்றன. ஏற்கனவே விஜய் இரண்டு மனுக்களை தாக்கல் செய்திருக்க கூடிய சூழலில் மேலும் இரண்டு மனுக்களை தாக்கல் செய்தால் போதுமானது என தவெக நிர்வாகிகள் கூறுகின்றனர்.
ஏற்கனவே கொளத்தூர் பிரச்சாரத்தின் போது விஜய் விதிகளை மீறியதாக கூறி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், திருச்சி கிழக்கு பகுதியில் தாக்கல் செய்த மனதில் விஜயே குறிப்பிட்டு இருக்கிறார் அந்த தகவலையும் பெரம்பூர் மனுவில் இணைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
வயதை மாற்றி குறிப்பிட்ட விஜய்
அதோடு மட்டுமல்லாது பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்த வேட்பு மனுவில் தனது வயது 52 எனக் குறிப்பிட்ட விஜய் திருச்சி கிழக்கில் 51 என குறிப்பிட்டு இருக்கிறார். தொடர்ச்சியாக முரணான தகவல்களிடம் பெற்றிருப்பதால் அது குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் விஜய்யின் வேட்பு மனுக்களை ஏற்கலாமா வேண்டாமா என்பது குறித்து தேர்தல் அதிகாரிகள் தான் முடிவெடுப்பார்கள் எனவும் சொல்லப்படுகிறது.
ஏதேனும் ஒரு தொகுதியில் விஜய் வேட்பு மனு நிராகரிக்கப்படலாம் என சொல்லப்படக்கூடிய சூழலில் இந்த தகவல் தமிழக வெற்றிகழக நிர்வாகிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

More Stories
‘‘திமுக – காங்கிரஸ் கூட்டணி ஒரு குழப்ப அணி’’: விஜய் விமர்சனம்
புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய் இன்று பரப்புரை..-11 நிபந்தனைகள் ஏன்? என்ன நடக்கிறது?
சிறையில் இருந்து வேட்புமனு தாக்கல் செய்த ஹரி நாடார்.. வெளியான சொத்து மதிப்பு – எவ்வளவு தெரியுமா?