ஷாங்காய்: சீனாவின் ஷாங்காய் நகரில் உலகக் கோப்பை வில்வித்தை ஸ்டேஜ் 2 போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ரீகர்வ் அணிகள் பிரிவில் தீபிகா குமாரி, அங்கிதா பகத், கும்கும் மோஹோத் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி தங்கப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் சீனா அணியை எதிர்த்து விளையாடியது.
இந்த ஆட்டம் 4-4 என்ற கணக்கில் சமநிலையை எட்டியது. இதையடுத்து வெற்றியை தீர்மானிக்க ஷூட் அவுட் நடத்ப்பட்டது. இதில் இந்திய அணி இந்திய அணி 5-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றது.

More Stories
இராக் அணியை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி நாக் அவுட் சுற்றில் நுழைந்தது பிரான்ஸ் | FIFA WC 2026
200 டி20 போட்டிகளில் விளையாடி ஹர்மன்பிரீத் கவுர் உலக சாதனை
ஹாக்கி சாம்பியன்ஷிப்: இந்திய மகளிர் அணிக்கு கோப்பை