February 24, 2026

வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!

தங்கம், வெள்ளி இன்றைய விலை நிலவரம் பற்றி…

Gold prices

தங்கம், வெள்ளி விலை நிலவரம்PTI

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை காலை சவரனுக்கு ரூ. 240 அதிகரித்துள்ளது.

கடந்த வார இறுதியில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 1,17,440 -க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், வாரத்தின் முதல் நாளான நேற்று சவரனுக்கு ரூ. 1,440 உயர்ந்து ரூ. 1,18,880-க்கு விற்பனையானது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்ந்து ரூ. 119,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமின் விலை ரூ. 16,243.

இதனிடையே வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ. 10 குறைந்து, ரூ. 290-க்கும், ஒரு கிலோ ரூ. 2,90,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Spread the love