ரோட்டர்டாம்: நெதர்லாந்தின் ரோட்டர்டாம் நகரில் எஃப்ஐஹெச் ஹாக்கி புரோ லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய ஆடவர் அணி தனது 2-வது ஆட்டத்தில் நேற்று ஜெர்மனியை எதிர்த்து விளையாடியது.
இந்த ஆட்டத்தில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் மன்தீப் சிங் (7-வது நிமிடம்), ஷில்லானந்த் லக்ரா (13-வது நிமிடம்), நீலகண்ட சர்மா (35-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.
ஜெர்மனி அணி சார்பில் 45-வது நிமிடத்தில் ரஃபேல் ஹார்ட்கோப் கோல் அடித்தார். இந்த போட்டி இந்திய அணியின் மன்ப்ரீத் சிங்குக்கு 413-வது சர்வதேசப் போட்டியாக அமைந்தது. இதன் மூலம், இந்தியாவிற்காக அதிகப் போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

More Stories
FIFA உலகக்கோப்பை| 4-2 என குரோஷியாவை நசுக்கிய இங்கிலாந்து.. ஹேரி கேன் படைத்த வரலாறு!
‘லயன்’ மெஸ்ஸி ஹாட்ரிக்… உலகக் கோப்பை சாதனை – அல்ஜீரியாவை பந்தாடிய அர்ஜெண்டினா
இந்தியா செய்த மிகப்பெரிய தவறு.. பேட் பிடிக்காமல் 10 ரன்கள்.. அதிர்ஷ்டத்தால் இலங்கை வெற்றி!